கணவனை கொன்று கட்டிலில் தூங்குவது போன்று செட்டப் - பலே மனைவியின் கொடூர செயல்
ஒடிசாவில் கணவனை கொலை செய்து சடலத்தை வீட்டிலேயே மறைத்து வைத்த மனைவியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மாநகராட்சியில், சியாமா முண்டாரி - ஜிங்கி தம்பதியினர் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், கடந்த வாரம் இருவருக்கும் தகராறு முற்றியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மனைவி கணவனை அடித்தே கொலை செய்துள்ளார். அதன் பிறகு கணவனின் சடலத்தை என்ன செய்வது என்று தெரியாமல், வீட்டிலேயே அவர் தூங்குவது போல செட் செய்துள்ளார்.
ஆனால் நாட்கள் செல்ல செல்ல, துர்நாற்றம் வருவதை அறிந்து போலீசில் புகார் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை மீட்டு அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.