அத்துமீறிய ரீல்ஸ் மோகம்..சாலையில் தீ வைத்த இளைஞர் - நள்ளிரவில் நடந்த கொடூரம்!
ரீல்ஸூக்காக ஒருவர் சாலைக்கு தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ரீல்ஸ் மோகம்
இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி, பல்வேறு நல்ல விஷயங்களுக்குப் பயன்பட்டு வருகிறது. அதைச் சிலர் தவறான விஷயங்களுக்குப் பயன்படுத்துவதும் அதிகரித்துள்ளது.
தாங்கள் செய்வது சாகசம் என்ற எண்ணத்துடன், சிலர், சமூக வலைத்தளங்களில் பிரபலமடைய வீடியோக்களை வெளியிட்டு வைரலாக்க முயல்கின்றனர்.இதனால் பல விபத்துகளும் உயிரிழப்புகளும் அரங்கேறி வருகிறது.
அந்த வகையில் ரீல்ஸூக்காக ஒருவர் சாலைக்கு தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.உத்தரப்பிரதேச மாநிலம் ஃபதேபூரில் தேசிய நெடுஞ்சாலை 2-ல் தார் வாகனத்தின் முன் ஷேக் பிலால் என்ற நபர் நின்று கொண்டு நெடுஞ்சாலையில் 2024 என்று எழுதி உள்ளார்.
ஆபத்து
அதன் மீது பெட்ரோல் ஊற்றி, தீ வைத்து எரித்துள்ளார்.அதுமட்டுமல்லாமல் அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலானதை அடுத்து கடும் கண்டனங்கள் எழுந்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.