தேனிலவிற்கு Lipstick எடுத்துச் செல்ல.. ரூ.27 லட்சத்திற்கு handbag வாங்கிய பெண் - எங்கு தெரியுமா?
லிப்ஸ்டிக் எடுத்துச்செல்லப் பெண் ஒருவர் ரூ.27 லட்சத்திற்குக் கைப்பை ஒன்றை வாங்கியுள்ளார்.
லிப்ஸ்டிக்
பெண்கள் பொதுவாக அழகு சாதன பொருட்கள் மீது அதிகம் ஆர்வம் கொண்டவராக இருப்பார்கள். அதிலும் அவர்கள் வாங்கும் பொருள்கள் அனைத்தும் விலை உயர்ந்ததாகவே இருக்கும். அதனைப் பாதுகாத்து வைப்பதிலும் அதிக கவனம் செலுத்துவார்கள்.
அந்த வகையில் மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர்லிப்ஸ்டிக் எடுத்துச்செல்லப் பெண் ஒருவர் ரூ.27 லட்சத்திற்கு கைப்பை ஒன்றை வாங்கியுள்ளார். இது குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் தாய் மற்றும் மகள் ஒரு கைப்பை வாங்கக் கடைக்குச் செல்கின்றனர்.
அங்கு தனது மகளுக்குத் திருமண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தாய் கூறுகிறார். உடனே அந்த மகள் தனது தேனிலவிற்கு லிப்ஸ்டிக் எடுத்துச்செல்ல புதிய கைப்பை வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு அந்த கடையின் உரிமையாளர் ஒவ்வொரு மாடலாக காட்டுகிறார்.
handbag
அதன் பிறகு அப்போது கடையில் உள்ள அந்த பெண் அவர்களிடம் புகழ்பெற்ற ஹெர்மிஸ் கெல்லி (Hermes Kelly) நிறுவனத்தின் ஆடம்பரக் கைப்பைகளைக் காட்டுகிறார்.ஆனால் மகள் ஒரு குட்டிப் பையைக் காட்டி அதுதான் வேண்டும் என்கிறார்.
உடனே அந்த தாய் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் ரூ.27 லட்சம் மதிப்புள்ள கைப்பையை வாங்கி தந்துள்ளார். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.