மாமியார் சாகுவதற்கு வினோத வேண்டுதல் - உண்டியலை திறந்துபோது அதிர்ந்த ஊழியர்கள்
கோவில் உண்டியலில் இருந்த 20 ரூபாய் நோட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.
கோவில் வேண்டுதல்
கோவிலுக்கு செல்லும் பெரும்பாலானோர் கல்வி, ஆரோக்கியம், வேலை, திருமணம் இது போன்ற பல விஷயங்களுக்காக கடவுளிடம் வேண்டிக்கொள்வார்கள்.
ஆனால் கர்நாடகாவில் ஒருவர் செய்த வினோத வேண்டுதல் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடைய செய்ததோடு, இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரூ.20 நோட்டு
கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் அப்ஜலாபுரா தாலுகாவில் கட்டரக பாக்யவந்தி கோவில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற கோவில் என்பதால் இந்த கோவிலுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகிறார்கள். சமீபத்தில் இந்த கோவிலில் உள்ள உண்டியலை திறந்து அதில் உள்ள காணிக்கை பணத்தை எண்ணும் பணி நடைபெற்றது.
அப்போது ஒரு 20 ரூபாய் நோட்டில் "அம்மா எங்கள் மாமியார் சீக்கிரம் சாக வேண்டும் அம்மா" என்று எழுதப்பட்டிருந்தது. செயல் அலுவலர் இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கோவில் ஊழியர்கள், உடனடியாக கோவில் அதிகாரிகள் கவனத்துக்கு இந்த 20 ரூபாய் நோட்டை கொண்டு சென்றனர். இந்த 20 ரூபாய் நோட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது குறித்து பேசிய கோவில் செயல் அலுவலர் பிரகாஷ் குத்ரே, கோவில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் ரூ.60 லட்சத்து 5 ஆயிரம் ரொக்கப்பணம், ஒரு கிலோ வெள்ளி ஆபரணங்கள், 200 கிராம் தங்கம் இருந்தது. மேலும் மாமியார் மரணத்திற்கு ஆசைப்பட்டு எழுதிய ஒரு ரூபாய் நோட்டும் இருந்தது" என தெரிவித்தார்.