தாயின் ரீல்ஸ் மோகம்.. நூலிழையில் உயிர் தப்பிய மகள் - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!
தாய் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்தபோது மகள் விபத்தில் நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
ரீல்ஸ்
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் இன்ஸ்டாகிராம் மற்றும் youtube தளங்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் பயன்படுத்தப்படுகிறது.இந்தியாவில் டிக்டாக் தடை செய்யப்பட்ட பின் இன்ஸ்டாகிராம் கொண்டு வந்த ரீல்ஸ் என்பது பரவலான கவனத்தைப் பெற்றது.
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களை உருவாக்குவதன் மூலம் ஒரு சாதாரண மனிதர் கூட நிறையப் பணம் சம்பாதிக்க முடியும். இதற்கு அந்த ரீல் வீடியோ வைரலானால் போதும். இந்த நிலையில் தாய் ஒருவர் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருக்கும் போது மகளை ஆபத்தில் சிக்க நேர்ந்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதிர்ச்சி வீடியோ
அந்த வீடியோவில் தாய் ஒருவர் செல்போனில் ரீல்ஸிக்கு நடனம் ஆடிக்கொண்டு இருக்கிறார். அப்போது அவருடைய மகன் அம்மாவை அழைக்கிறார். அப்போது தாய் திரும்பிப் பார்த்தபோது இளைய மகள் நெடுஞ்சாலையை நோக்கி சென்றுகொண்டிருந்தார்.இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய் வேகமாக ஓடிப் போய் தனது மகளை மீட்டார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.மேலும் ரீல்ஸ் எடுக்கும் போது எடுக்கும் போது மிகுந்த கவனத்துடன், குறிப்பாகக் குழந்தையை வைத்திருந்தால் மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டும் என்று இந்த வீடியோ அறிவுறுத்துவதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.