உலகில் மிகவும் விலை உயர்ந்த தண்ணீர் பாட்டில் - ஒரு லிட்டர் எவ்வளவு தெரியுமா ?
உலகில் மிகவும் விலை உயர்ந்த தண்ணீர் பாட்டில் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தண்ணீர் பாட்டில்
இந்த உலகில் மனிதர்கள் உயிர் வாழ இன்றியமையாதது உணவு , கற்று , இருப்பிடம் , நீர் தான். அதிலும் குறிப்பாக மனித உடலில் 60% தண்ணீரால் ஆனது.
இத்தகைய சிறப்பு மிக்க தண்ணீர் விலங்குகள், கால்நடைகள் சுகாதாரம் ,தொழில் உள்ளிட்டவைகளுக்கு அத்தியாவசியமாக உள்ளது.
நாம் பொதுவாக வெளியிலோ அல்லது பள்ளி, கல்லூரி அலுவலகம் போன்ற இடங்களுக்குச் செல்லும் போது தண்ணீர் பாட்டில் பயன்படுத்துவது வழக்கம்.
விலை
ஆனால் உலகில் மிகவும் விலை உயர்ந்த தண்ணீர் பாட்டில் ஒரு லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ஃபில்லிகோ ஜுவல்லரி என்ற வாட்டர் பாட்டில் ஒரு லிட்டருக்கு 1390 டாலருக்கு விற்பனை ஆகிறது.
இது இந்திய மதிப்பில் 1 லட்சத்து 16 ஆயிரம் ரூபாயாகும்.இந்த தண்ணீர் ஜப்பானின் முக்கிய நீரூற்றிலிருந்து பெறப்படுகிறது . அதுமட்டுமில்லாமல் இந்த வாட்டர் பாட்டில் அலங்கார நகையைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.