கெட்டுப்போன குளுக்கோஸ்..13 குழந்தைகள் கொத்து கொத்தாக மடிந்த சம்பவம் - வெளியான அதிர்ச்சி!
கெட்டுப்போன குளுக்கோஸ் பாக்கெட்டுகள் சாப்பிட்ட 20 குழந்தைகளுக்கு பாக்டீரியா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
மெக்ஸிகோ
மெக்ஸிகோவில் கெட்டுப்போன குளுக்கோஸ் பாக்கெட்டுகள் சாப்பிட்டு 13 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து குறிப்பிட்ட மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் குளுக்கோஸ் பாக்கெட்டுகளைப் பயன்படுத்த வேண்டாம் என மருத்துவமனைகளுக்கு அந்நாட்டுச் சுகாதாரத் துறை வலியுறுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அந்த நாட்டு அரசு விசாரணை நடத்த உத்தரவிட்டது.
பாக்டீரியா தொற்று
உயிரிழந்த 13 குழந்தைகளின் உடல்களைப் பிரேதப் பரிசோதனைக்காக ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.அதில் அனைத்து விதமான நோய் எதிர்ப்பு மருந்துகளையும் தாக்கும் Klebsiella oxytoca எனப்படும் பாக்டீரியா கண்டறியப்பட்டுள்ளதாகப் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கிளெப்சில்லா ஆக்ஸிடோகா பாக்டீரியா மூலம் ரத்த நாளத்தில் தொற்று ஏற்பட்டு13 குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் இதுவரை 20 குழந்தைகளுக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மெக்சிகோவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.