செவ்வாய் கிரகத்தில் மனிதனின் கண் : வைரலாகும் புகைப்படம்

By Irumporai Jun 14, 2022 04:09 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

நமது சூரிய குடும்பத்தில் பூமியை தவிர வேறு எந்த கிரகங்களிலும் மனிதர்களால் வாழ முடியாது என்ற சூழல் உள்ள நிலையில் செவ்வாய் கிரகம் மட்டும் இதில் விதிவிலக்காக உள்ளது.

நமது பூமிக்கு மிக அருகில் உள்ளதால் செவ்வாய் கிரகத்தை பற்றிய ஆராய்ச்சிக்கு உலகின் பல்வேறு நாடுகள் கோடிக்கணக்கான பணத்தை கொட்டி ஆராய்ச்சி நடத்தி வருகின்றன அதே போல் செவ்வாய் கிரகம் தொடர்பான சில புகைப்படங்கள் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றன .

சர்ச்சையினை ஏற்படுத்திய புகைப்படங்கள்

அதாவது செவ்வாய் கிரகத்தில் உள்ள நிலப் பகுதியில் மனிதனின் முகம், பிரமிடு போன்ற அமைப்பு ஆகியவை தெரிந்ததாக சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின இந்த நிலையில் ஐரோப்பிய ஆய்வு நிறுவனம் அண்மையில் செவ்வாய் கிரகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டது.

செவ்வாய் கிரகத்தில் மனிதனின் கண் : வைரலாகும் புகைப்படம் | The Human Eye Visible On The Surface Of Mars

அந்த புகைப்படத்தில், செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பில் மனிதனின் கண் போன்ற அமைப்பு காணப்பட்டது. நிலப்பரப்பில் கண் போன்ற அமைப்பு காணப்படுவது இது முதல் முறை அல்ல.

ஏற்கனவே நமது பூமியில் உள்ள மிகப்பெரிய பாலைவனமாக அறியப்படும் ஆப்பிரிக்காவின் சகாரா பாலைவனத்தில், இதே போல் கடந்த 1965 ஆம் ஆண்டு கண் போன்ற அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது.

செவ்வாயில் மனிதனின் கண்

இது குறித்த மர்மமே இன்னும் விலகாத நிலையில், செவ்வாய் கிரகத்தில் தெரியும் இந்த கண் அமைப்பு, தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது.

அதே சமயம், இந்த கண் போன்ற அமைப்பு மண் படிமங்கள் அல்லது எரிமலைக் குழம்பு சென்ற தடமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மேலும் மனிதக் கண்களைப் போலவே, இதிலும் நரம்புகள் போன்ற அமைப்பு தெரிவதால், அவை செவ்வாய் கிரகத்தில் 400 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் நீர் இருந்ததற்கான ஆதாரமாக இருக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் சுலபமா கிடைக்கும் : சீன விஞ்ஞானிகள் தகவல்