செவ்வாய் கிரகத்தில் பழமையான பாறைகள் : நாசாவின் விண்கலம் அசத்தல்

nasa inspection PerseveranceRover
By Irumporai Dec 17, 2021 03:37 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

நாசாவின் பெர்செவரன்ஸ் ரோவர், செவ்வாய் கிரகத்தில் உள்ள பழமையான பாறைகளை கண்டறிந்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் உள்ள ஜெசெரோ என்ற பள்ளத்தை ஆராய்ச்சி செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா,  ஒரு கார் அளவிலான பெர்செவரன்ஸ் என்ற ரோவரை உருவாக்கியது. இந்த ரோவர், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 30-ந் தேதி செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி வைத்தது.

இந்த ரோவர் செவ்வாய் கிரகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 18-ந் தேதி வெற்றிகரமாக தரை இறங்கிசெவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பை ஆய்வு செய்து புகைப்படங்களை பூமிக்கு அனுப்பி வருகிறது.

இந்த நிலையில் பெர்செவரன்ஸ் ரோவர், செவ்வாய் கிரகத்தில் உள்ள பழமையான பாறைகளை கண்டறிந்துள்ளது இந்தப் பாறைகள் அடிப்படையில் எரிமலை தோற்றம் கொண்டவை, அதிலும் குறிப்பாக அவை ஒருவேளை எரிமலை வெடிப்பின் மூலம் உருவாகியிருக்கலாம் என கருதுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

தற்போது செவ்வாய் கிரகத்தில் பனி பாறைகளை பெர்செவரன்ஸ் ரோவர் கண்டறிந்து, விஞ்ஞான வரலாற்றில் முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

ஏனென்றால், அடுத்த 10 ஆண்டுகளில் இந்தப் பாறைகளின் மாதிரிகள் பூமிக்கு கொண்டு வரப்படுகிறபோது அவை எந்தக் காலத்தில் தோன்றியவை என்பதை கண்டறிய முடியும்

மேலும், இதன் மூலம் செவ்வாய் கிரகம் மற்றும் அதற்கு அப்பாலும் உள்ள பரந்த அளவிலான சூரிய குடும்பத்தின் வரலாறு பற்றிய புதிய தகவல் கிடைக்கலாம் என நம்புகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.