உல்லாசம் அனுபவிக்க மறுப்பு தெரிவித்த கள்ளக்காதலி - கள்ளக்காதலன் செய்த கொடூரம்
உல்லாசம் அனுபவிக்க மறுப்பு தெரிவித்த கள்ளக்காதலியை கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொடூர கொலை
கடலூர் மாவட்டத்திலுள்ள புவனகிரி பகுதியில் முத்துவேல் என்பவருக்கு 45 வயதில் சீதா என்ற மனைவியை இருந்துள்ளார்.
இவர் சிதம்பரத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்துள்ளார்.
கடந்த 13ஆம் தேதி சீதா அவரது வீட்டில் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து சீதாவின் மகள் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
சிக்கிய கள்ளக்காதலன்
சந்தேகத்தின் பேரில் அவரது வீட்டிற்கு அருகில் வசித்து வரும் குமார் என்ற 48 வயது நபர் பிடித்து போலீசார் விசாரித்தனர். அந்த விசாரணையில் தான் சீதாவை கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து வாக்குமூலத்தில் குமார் இரண்டு ஆண்டுகளாக சீதாவுக்கும் தனக்கும் பழக்கம் இருப்பதாகவும் சம்பவ தினத்தில் சீதாவின் வீட்டுக்கு உல்லாசம் அனுபவிக்க சென்றபோது போலீசார் மறுப்பு தெரிவித்ததாகவும் வலுக்கட்டாயமாக சீதாவுடன் உடலுறவு வைக்க முயற்சித்த பொழுது அவர் தீவிரமாக எதிர்ப்பு தெரிவித்ததாகவும்,
இதனால் ஆத்திரம் அடைந்த குமார் சீதாவின் தலையில் அருகிலிருந்த அம்மி குழவி கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியதாகவும் தெரிவித்துள்ளார்.