முதல்முறை ஒரு மாநில கட்சி வென்ற நாள்; மீண்டும் வரலாறு படைப்போம் - மு.க ஸ்டாலின்

M K Stalin
By Swetha Mar 06, 2024 05:01 AM GMT
Report

 திமுக முதல்முறை ஆட்சி பொறுப்பேற்ற நாள் இன்று என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வென்ற நாள்

இன்று திமுக முதல்முறை ஆட்சி பொறுப்பேற்ற நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இது குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவரது எக்ஸ் தளத்தில், மார்ச் 6 இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு மாநிலக் கட்சி தேர்தலில் வென்று ஆட்சியமைத்த நாள்.

dmk assumed power for the first time

பேரறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளம்படை தெற்காசிய ஜனநாயக வரலாற்றில் ஓர் அமைதிப்புரட்சியை நிகழ்த்திக் காட்டிய நாள்.

'நீங்கள் நலமா' புதிய திட்டம்; மக்கள் தொலைபேசியில் அனுகலாம் - முதல்வர் அறிவிப்பு!

'நீங்கள் நலமா' புதிய திட்டம்; மக்கள் தொலைபேசியில் அனுகலாம் - முதல்வர் அறிவிப்பு!

மு.க ஸ்டாலின்

அன்று தமிழ்நாட்டைக் காத்தோம். இன்று மொத்த இந்தியாவின் கூட்டாட்சித்தன்மையையும் பன்முகத்தன்மையையும் மதச்சார்பின்மையையும் காக்க வேண்டிய பெரும் பொறுப்பை நம் தோள்களில் சுமக்கும் அளவுக்கு நம் வலிமை கூடியுள்ளது.

m.k stalin

மீண்டும் வரலாறு படைப்போம்! நாட்டைக் காப்போம்! என்று குறிப்பிட்டுள்ளார்.