குடும்பத் தலைவிகளுக்கு குட் நியூஸ்.. ரூ.1000 மகளிர் உரிமை தொகை பெற தனி எ.டி.எம் கார்டு தயாராகிறது!
குடும்ப தலைவிகள் மகளிர் உரிமை தொகை பெற தனி எ.டி.எம் கார்டு தயாராகி வருகிறது.
உரிமை தொகை
தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு இந்த மாதம் முதல் செயல்படுத்தவுள்ளது. இந்த திட்டத்தில் இணைய தமிழகம் முழுவதும் ஒரு கோடியே 63 லட்சம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர்.
அதிகாரிகள் அவர்கள் வீட்டிற்கு நேரில் சென்று அடையாளம் கண்டு தேர்வு செய்துள்ளனர். பின்னர் மாதம்தோறும் இந்த உரிமை தொகை அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும், வங்கி கணக்குகள் இல்லாதவர்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கி அல்லது கூட்டுறவு வங்கிகளில் வங்கி கணக்கு தொடங்க அறிவுறுத்தப்பட்டனர்.
எ.டி.எம் கார்டு
இந்நிலையில், தகுதியான பெண்களுக்கு வழங்குவதற்கான ஏ.டி.எம். கார்டு பிரத்யேகமாக தயாராகி வருகிறது. இது ரூபே கார்டாக வழங்கப்படும், இதன் மூலம் பணத்தை எடுத்து கொள்ள முடியும்.
இந்த உரிமை தொகை அடுத்த மாதம் முதல் மாதந்தோறும் 1-ந்தேதி வழங்கப்படும், எ.டி.எம் கார்டுகளை ரேஷன் கடைகளில் சென்று பெற்றுக்கொள்ளலாம். மேலும், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அவர்கள் பகுதி ஆர்.டி.ஓ.விடம் சென்று முறையிட்டு நிவாரணம் தேடிக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உறவுகளின் மீது அதிமான அக்கறை செலுத்தும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவங்கள மிஸ் பண்ணிடாதீங்க Manithan

viral video: குழாய்க்குள் மறைந்திருந்த பாம்புகளை நுட்பமாக முறையில் பிடித்த நபர்... பகீர் காட்சி! Manithan
