'நீங்கள் நலமா' புதிய திட்டம்; மக்கள் தொலைபேசியில் அனுகலாம் - முதல்வர் அறிவிப்பு!
'நீங்கள் நலமா?' என்ற புதிய திட்டம் தொடங்கப்பட உள்ளதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
புதிய திட்டம்
மயிலாடுதுறையில் ₹114.48 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், நெல் மணம் கொண்ட டெல்டா மாவட்டங்கள் மண் மணத்துடன் நெல் மணமும் கலந்து, வண்டல் நிலமும் அழகும் கொண்டவை டெல்டா மாவட்டங்கள்.
காவிரியால் செழிப்பான பாசனமும், பழமையான திருக்கோயில்களையும் கொண்டது டெல்டா மாவட்டங்கள்; புதிய மாவட்டங்களை உருவாக்கினால் மட்டும் போதாது, அதற்கான கட்டமைப்புகளையும் உருவாக்க வேண்டும் .தேர்தல் தேதி அறிவிக்கப்போகும் சூழலில் பிரதமர் அடிக்கடி தமிழ்நாடு வருகிறார்.
முதல்வர் அறிவிப்பு
தேர்தல் நேரத்தில் மட்டும் வந்து முகத்தை காட்டுபவர்கள் நாங்கள் அல்ல; அப்படி வருபவர்களை மக்களுக்குத் தெரியும்; தேர்தல் தேதி அறிவிக்கப்போகும் சூழலில் பிரதமர் அடிக்கடி தமிழ்நாடு வருகிறார், வரட்டும் வேண்டாமென்று சொல்லவில்லை. தமிழ்நாட்டு மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிவிட்டு வரட்டும்; ஆனால் தமிழ்நாட்டு மக்களின் ஓட்டு, வரிப்பணம் போதும் என்று நினைக்கின்றனர்.
அரசுத் திட்டங்களின் பயன்கள் உரிய மக்களை சேர்ந்துள்ளதா என்பதை அறிந்து கொள்ள மார்ச் 6ஆம் தேதி நீங்கள் நலமா என்ற திட்டம் தொடங்கப்பட உள்ளது.
பொதுமக்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு கருத்துக் கேட்டு அதன் அடிப்படையில் அரசுத் திட்டங்கள் செம்மைப்படுத்தப்படும் என அறிவித்துள்ளார்.