மனைவி உள்ளிட்ட 3 பேரை கொடூரமாக கொன்ற கணவன் - விபத்தில் சிக்கி பலி!
மனைவி உள்பட 3 பேரை கொன்ற கணவர் விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார்.
கொடூரக் கொலை
தஞ்சாவூர், விக்டோரியா காலனியைச் சேர்ந்தவர் சுந்தர் கணேஷ் (42). வங்கியில் வேலை பார்த்து வந்த அவர், 2 ஆண்டுகளாக வேலை இல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இவரது மனைவி நித்யா(39). வங்கி மேலாளராக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், வீட்டை விற்க சுந்தர் முயற்சி வந்ததாக கூறி கணவன் மனைவிக்கு இடயே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அதில், ஆத்திரமடைந்த சுந்தர் நித்யாவை அரிவாளால் வெட்டியுள்ளார். தொடர்ந்து, காரில் ஏறி தப்பிச் சென்றார்.
விபத்தில் பலி
அதன்பின், பரிசுத்தம் நகரில் பால் விற்பனை மையம் நடத்தி வரும் கீழத் திருப்பூந்துருத்தியைச் சேர்ந்த தாமரைச்செல்வன் (35), கோபியை (32) வெட்டியுள்ளார். இதற்கான காரணம் குறித்து உடனடியாகத் தெரியவில்லை.
உடனே அங்கிருந்து காரில் தப்பிச் சென்றார். அப்போது, முத்தாண்டிப்பட்டி பகுதியில் சென்ற காரின் மீது அந்த வழியாக வந்த லாரி மோதியதில், பலத்த காயமடைந்த சுந்தர் கணேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.