தன்பாலினத் திருமணத்திற்கு ஒருவழியாக சட்ட அங்கீகாரம் - எங்கு தெரியுமா?
ஒரே பாலின திருமண சட்டத்திற்கான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
தன்பாலினத் திருமணம்
தாய்லாந்தில் தன்பாலினத் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன் மூலம், எந்த பாலினத்தை சேர்ந்தவரும், திருமணம் செய்யும் போது அவர்களுக்கு சட்ட அங்கீகாரம் கிடைக்கும். இதற்கு 415 உறுப்பினர்களில் 400 பேர் மசோதாக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
மசோதா நிறைவேற்றம்
இதனைத் தொடர்ந்து, சட்டத்தில் இருந்த ஆண்கள் மற்றும் பெண்கள், கணவன் மற்றும் மனைவி வார்த்தைகள் தனிநபர்கள், வாழ்க்கை துணையர்கள் என மாற்றப்பட்டுள்ளது.
மேலும், நிதி மற்றும் மருத்துவ உரிமைகள் கிடைப்பதற்கான வாய்ப்புகளை இந்த சட்டம் வழங்குகிறது.
இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால், தென்கிழக்கு ஆசியாவில் இத்தகைய சட்டத்தை நிறைவேற்றிய முதல் நாடாக தாய்லாந்து மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.