தெற்கு ஆசியாவில் முதல்முறை.. தன்பாலினத் திருமண பதிவு- எங்கு தெரியுமா?
முதல்முறையாக, தன் பாலினத் திருமணம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தன் பாலினத் திருமணம்
நேபாள உச்சநீதிமன்றம் தன் பாலினத் திருமணங்களுக்கு கடந்த 2007- ஆம் ஆண்டு அனுமதி அளித்தது. மேலும், 2015ல் பாலினத் தேர்வின் அடிப்படையில் மக்களிடையே பாகுபாடு காட்டக்கூடாது எனத் தெரிவித்தது.
இந்நிலையில், மாயா குருங் என்ற திருநங்கைக்கும், சுரேந்திர பாண்டே என்ற சமபாலின சேர்க்கையாளருக்கும் இடையே சட்டபூர்வமாக நடைபெற்ற திருமணத்தை பதிவு செய்ய அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
சட்ட அங்கீகாரம்
தொடர்ந்து, இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம், தன் பாலினத் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளித்து உத்தரவு பிறப்பித்தது.
அந்த வகையில் இந்த திருமணம் தான் தெற்கு ஆசியாவில் முதல்முறை பதிவுசெய்யப்பட்ட ஒன்று என்ற பெருமையைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.