மகள்களை மனைவியிடம் இருந்து மீட்க.. தாயாக தந்தை மாறிய நெகிழ்ச்சி சம்பவம்!

United States of America
By Sumathi Jan 07, 2023 05:44 AM GMT
Report

மனைவியிடம் இருந்து மகள்களை மீட்க தந்தை ஒருவர் தன் பாலினத்தையே மாற்றியுள்ளார்.

மகள் பாசம் 

அமெரிக்கா, ஈக்வடாரைச் சேர்ந்தவர் ரெனே சாலினாஸ் ராமோஸ்(47). இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக மனைவியும் இவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மகள்கள் மனைவியுடன் வசித்து வருகின்றனர்.

மகள்களை மனைவியிடம் இருந்து மீட்க.. தாயாக தந்தை மாறிய நெகிழ்ச்சி சம்பவம்! | Father Legally Changes His Gender For Daughters

இந்நிலையில், மனைவியும், அவரது குடும்பத்தாரும் தனது மகள்களைக் கொடுமைப்படுத்துவதாக கேள்விப்பட்டுள்ளார். மேலும், 5 மாதங்களாக மகள்களை பார்க்க முடியாமலும் தவித்துள்ளார். ஆனால், சட்டப்படியும் இவரும் மகள்கள் வாழ மறுக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த பிரச்சணைக்கு தீர்வு காண முயன்ற தந்தை மகள்களுக்காக தன் பாலினத்தை மாற்றிக்கொண்டார்.

தாயாக மாறிய தந்தை

தனது அடையாள அட்டையிலும் தனது பாலினத்தை பெமினினோ என மாற்றிக் கொண்டார். 'இப்போது தானும் ஒரு பெண் தான், எனவே தன் குழந்தைகளுக்கு தன்னால் நல்ல ஒரு அம்மாவாக இருக்க முடியும்' எனக் கூறி, மனைவியிடம் இருந்து மகள்களை மீட்டுத்தரக் கோரி நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளார்.

மகள்களை மனைவியிடம் இருந்து மீட்க.. தாயாக தந்தை மாறிய நெகிழ்ச்சி சம்பவம்! | Father Legally Changes His Gender For Daughters

அதற்கான ஆவணங்களையும் சமர்பித்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து ஈக்வடார் ஃபெடரேஷன் ஆஃப் எல்ஜிபிடிஐ அமைப்புகளின் இயக்குநரான டயான் ரோட்ரிக்ஸ் கூறுகையில், "இது அவரின் தனிப்பட்ட விஷயம். இந்த விவகாரத்தால் சட்டசபையில் எங்களுக்கு எதிராக சட்டம் இயற்றத் தொடங்கி விடுவார்களோ என்று நாங்கள் பயப்படுகிறோம்

பாலினத்தை அங்கீகரிப்பதில் சிக்கல்கள் இருப்பதாக நாங்கள் கண்டனம் செய்து வரும் வேளையில், ஒருவர் தனது ஐடியில் விருப்பமான பாலின மாற்றத்தை வெளிப்படையாக எளிதாகக் கடந்து சென்றது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது எனக் கூறியுள்ளார்.