அதிரவைக்கும் பின்புலம்.. மாடல் to திருநங்கை - காதல் மன்னனாக எம்பாப்பே!
எம்பாப்பேவின் காதல் உறவு குறித்த தகவல்கள் தற்போது வைரலாகி வருகிறது.
எம்பாப்பே
கால்பந்து உலகக் கோப்பை தொடரில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி அர்ஜென்டினா கோப்பையை கைப்பற்றியது. ஆனால், பிரான்ஸ் அணியின் எம்பாப்பே டஃப் கொடுத்து ரசிகர்களின் மனதில் நின்றுவிட்டார். தொடர்ந்து, வரலாற்றில் இறுதிப் போட்டியில் அதிக கோல்களை அடித்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
அதேபோல், உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஹாட்ரிக் கோல்களை அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையும் கொண்டுள்ளார். இந்நிலையில் தற்போது, இவரது காதல் வாழ்க்கை பேசு பொருளாகியுள்ளது. உலகக் கோப்பையின் போது அலிசியா அய்லிஸ் எனும் பிரெஞ்சு பாடகியுடன் கிசுகிசுக்கப்பட்டார்.
காதல் மன்னன்
அதன்பின், ஏம்மா ஸ்மேட் என்ற நடிகையுடன் காதலில் இருந்ததாக கூறப்பட்டது. அதனையடுத்து, திருநங்கை ஐனெஸ் ராவு(32) என்பவருடன் டேட்டிங் சென்ற நெருக்கமான புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால், அவர்கள் காதலில் இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
தொடர்ந்து, மொரோக்கா வீரர் அசார்ப் ஹாகிமியை கட்டிப்பிடித்து எம்பாபே பேசிக்கொண்டு இருந்தார். அதன் மூலம், தன் பாலின உறவாளரா, காதலில் உள்ளாரா என விவாதங்கள் எழுந்தன.
அடுத்து, ஸ்டெல்லா மேக்ஸ்வெல்(32) விக்டோரியா சீக்ரெட் மாடல் என்பவருடன் மே 2022 இல் இருந்து டேட்டிங் செய்து வருகிறார்.