பீலேவின் 60 ஆண்டு உலகக்கோப்பை சாதனை - தட்டித்தூக்கிய பிரான்ஸ் வீரர்!

Football France FIFA World Cup Qatar 2022 Kylian Mbappé
By Sumathi Dec 06, 2022 06:28 AM GMT
Report

கால்பந்து தொடரில் 60 ஆண்டு கால ஜாம்பாவன் பீலேவின் சாதனையை பிரான்சின் எம்மாப்பே முறியடித்துள்ளார்.

பீலேவின் சாதனை

2018 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் இளம் வீரராக பிரான்சின் எம்மாப்பே இறங்கினார். கத்தார் உலகக் கோப்பையிலும் கலக்கி வருகிறார். அதில், போலந்துக்கு எதிரான போட்டியில் இரு கோல்கள் அடித்ததன் மூலம் நடப்பு உலகக் கோப்பையில் 5 கோல்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார்.

பீலேவின் 60 ஆண்டு உலகக்கோப்பை சாதனை - தட்டித்தூக்கிய பிரான்ஸ் வீரர்! | Frances Kylian Mbappe Overtakes Pele Record

இரண்டு உலகக் கோப்பையில் மட்டுமே விளையாடியுள்ளார். இதுவரை 9 கோல்கள் அடித்துள்ளார். மேலும் 24 வயதுக்குள் உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

எம்மாப்பே அசத்தல்

அதன் மூலம் 60 ஆண்டு கால பீலேவின் சாதனையை முறியடித்துள்ளார். மேலும், ஜெர்மனியைச் சேர்ந்த குலோஸ் 16 கோல்கள் அடித்து, உலகக்கோப்பை தொடரில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையைக் கொண்டுள்ளார்.

தொடர்ந்து 3 உலகக் கோப்பைகளில் எம்மாப்பே விளையாட உள்ள நிலையில் இந்த சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.