Thailand: ட்ரிப் பிளான் பண்ணிட்டீங்களா - பலரும் அறியாத அசத்தலான ஸ்பாட் லிஸ்ட் இதோ..!

Thailand
By Sumathi Nov 04, 2023 10:15 AM GMT
Report

பெரும்பாலானோரால் அறியப்படாத அருமையான சுற்றுலா தலங்கள் தாய்லாந்தில் அமைந்துள்ளது.

thailand

பாங்காங்கில் இருந்து 900 கிமீ தொலைவில், மியான்மர் எல்லையோரம் அமைந்து இருக்கும் பகுதி மே ஹாங் சன். வனப்பகுதிகளை அதிகம் கொண்ட பனி சூழ்ந்த மலை தொடர்கள் அதிகம். தேசிய பூங்கா, பூபா வியூ பாயிண்ட், கேம்ப் போடுவதற்கான பாங் உங் பகுதி என ஏராளமான இடங்கள் உள்ளன.

மே ஹாங் சன்

நகாவுன் ரட்சசிமா பகுதியில் அமைந்துள்ள இடம் காவ் யாய். 10 ஆயிரம் வகையான விலங்குகள், பறவைகள், பூச்சிகள், ஊர்வன போன்றவைகள் உள்ளன. உயரமான நீர் வீழ்ச்சி காண்போரை கவர்கிறது.

காவ் யாய்

ஹுவா இன், இது ஒரு மீனவ கிராமம். ஏராளமான நீர் விளையாட்டுக்கள், குதிரை சவாரி, கோல்ப் விளையாட்டுக்கள், சாகச விளையாட்டுக்களை ஆடி மகிழலாம்.

ஹுவா இன்

கோ யாவ் நொய் இது ஒரு தீவு. இங்கு ஸ்பீட் போட்டிங், ஸ்கூபா டைவிங், மலையேற்றம், முவே தாய் பயிற்சி போன்றவற்றை செய்யலாம்.

கோ யாவ் நொய்

சுகோதாய், வரலாற்று சிறப்பு மிகுந்த பகுதி. பழங்கால கட்டிட அமைப்புகள், கோயில்கள், பூங்காக்கள், அரண்மனைகள் என பல உள்ளன. 

சுகோதாய்

இந்தியர்களுக்கு தீபாவளிப் பரிசு; தாய்லாந்து செல்ல விசா தேவையில்லை - கனவு நினைவாச்சு!

இந்தியர்களுக்கு தீபாவளிப் பரிசு; தாய்லாந்து செல்ல விசா தேவையில்லை - கனவு நினைவாச்சு!