உலகின் பணக்கார மன்னர் யார் தெரியுமா? வீட்டில் 38 விமானங்கள்,300 கார்கள் - 3.2 லட்சம் கோடி சொத்து..!

Thailand
By Thahir Jul 31, 2023 08:05 AM GMT
Report

தாய்லாந்து மன்னரின் சொத்து மதிப்பை கேட்டால் தலையே சுத்தி விடும். அந்த அளவிற்கு கோடிகளில் சொகுசு வாழ்க்கை குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

உலகில் உள்ள பழமையான அரச குடும்பங்களில் தாய்லாந்து அரச குடும்பமும் ஒன்று. உலகின் பணக்கார மன்னர்களில் ஒருவரான தாய்லாந்து மன்னர் மஹா வஜிரலோங்கோர்ன் இவர் கிங் பத்தாவது ராமா என்றும் அழைக்கப்படுகிறார்.

இந்த மன்னரின் சொத்து மதிப்பு 3.2 லட்சம் கோடி. இவரிடம் 38 விமானங்கள் மற்றும் நுாற்றுக்கணக்கான விலையுயர்ந்த 300க்கும் மேற்பட்ட கார்கள் உள்ளன.

Maha Vajiralongkorn is the richest king in world

பைனான்சியல் டைம்சின் கூற்றுப்படி, தாய்லாந்தின் அரச குடும்பத்தின் சொத்து மதிப்பு 40 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இருக்கும், அதாவது 3.2 லட்சம் கோடிகள்.அதனால் தான் அவர் உலகின் பணக்கார மன்னர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.

தாய்லாந்தின் மஹா வஜிரலோங்கோர்னின் மிகப் பெரிய சொத்து நாடு முழுவதும் பரவியிருக்கிறது. தாய்லாந்தில் 6,560 ஹெக்டேர் (16,210 ஏக்கர்) நிலம் உள்ளது.

இந்த மன்னரு்ககு தலைநகர் பாங்காக்கில் 17,000 ஒப்பந்தங்கள் உட்பட நாடு முழுவதும் 40,000 வாடகை ஒப்பந்தங்கள் உள்ளன. 

இந்த நிலங்களில் வணிக வளாகங்கள், ஓட்டல்கள் மற்றும் பல அரசு கட்டங்கள் உள்ளன. தாய்லாந்தின் 2வது பெரிய வங்கியான சியாம் கமர்ஷியல் வங்கியில் மன்னர் மஹா வஜிரலோங்கோர்ன் 23 சதவீத பங்குகளையும், நாட்டின் மிகப்பெரிய தொழில்துறை நிறுவனமான சியாம் சிமெண்ட் குழுமத்தில் 33.3 சதவீத பங்குகளையும் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

தாய்லாந்து மன்னரின் கிரீடத்தில் உள்ள ரத்தினங்களில் ஒன்று 545.67 காரட் பழுப்பு நிற கோல்டன் ஜூபிலி வைரமாகும். இது உலகின் மிகப்பெரிய மற்றும் விலையுயர்ந்த வைரம் என்று கூறப்படுகிறது.

இதன் மதிப்பு ரூ.98 கோடி வரை இருக்கும் என வைர ஆணையம் மதிப்பிட்டுள்ளது. 38 விமானங்கள், 300 க்கும் மேற்பட்ட கார்கள் வைத்திருப்பதால் தாய்லாந்து மன்னருக்கு பொழுது போக்கிற்கும் குறைவில்லை.

பைனான்சியல் டைம்ஸின் கூற்றுப்படி, தாய்லாந்து மன்னரிடம் 21 ஹெலிகாப்டர்கள் உட்பட 38 விமானங்கள் உள்ளன.

இதில் போயிங், ஏர்பஸ் விமானம் மற்றும் சுகோய் சூப்பர்ஜெட் உள்ளிட்டவை அடங்கும். விமானத்தின் எரிபொருள் மற்றும் பராமரிப்புக்காக ஆண்டுக்கு ரூ.524 கோடி செலவிடப்படுகிறது.