மோடிக்கு வாழ்த்து தெரிவித்த எலான் மஸ்க் - அந்த விஷயத்தையும் உறுதி செய்துள்ளார்
பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடிக்கு உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மோடிக்கு வாழ்த்து
2024 நாடாளுமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மோடி பிரதமராக நாளை (06.06.2024 ) பதவியேற்க உள்ளார். தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், டெஸ்லா நிறுவன தலைமை செயல் அதிகாரியும், உலக பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ‛‛உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தலில் உங்களது வெற்றிக்கு வாழ்த்துகள் நரேந்திர மோடி. இந்தியாவில் எனது நிறுவனங்கள் உற்சாகமாக பணிகளைச் செய்ய ஆவலுடன் காத்திருக்கின்றன'' என தெரிவித்துள்ளார்.
டெஸ்லா
டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் ஆலையை அமைப்பது கிட்டத்தட்ட முடிவான சூழ்நிலையில், ஏப்ரல் மாத இறுதியில் இந்தியா வர இருந்த எலான் மஸ்க், நரேந்திர மோடியை சந்திக்க இருப்பதாகவும், எந்த மாநிலத்தில் ஆலை அமைய உள்ளதோ அந்த மாநில அதிகாரிகளை சந்திப்பார் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீரென எலான் மஸ்க் தனது பயணத்தை ரத்து செய்தார்.
மேலும், வேலை அதிகமாக இருப்பதால் வர முடியவில்லை. இந்த வருட இறுதிக்குள் வர உள்ளதாக தெரிவித்து இருந்தார். தற்பொழுது அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் டெஸ்லா ஆலை இந்தியாவில் அமைய உள்ளதை உறுதி படுத்தியுள்ளார். இந்நிலையில், எலான் மஸ்க் விரைவில் இந்தியா வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Congratulations @narendramodi on your victory in the world’s largest democratic elections! Looking forward to my companies doing exciting work in India.
— Elon Musk (@elonmusk) June 7, 2024