இந்திய அரசியலமைப்புச் சட்டம்; பயபக்தியோடு தலை வணங்கிய மோடி - viral video!
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முன் பிரதமர் நரேந்திர மோடி தலைவணங்கினார்.
அரசியலமைப்புச் சட்டம்
இந்த ஆண்டின் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், பதிவான வாக்குகளின் எண்ணிக்கை நேற்று காலை தொடங்கியது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றது.
அதிலும், பா.ஜ.க தனிப்பெரும்பான்மைக்கான இடங்களை தொடாமல் 240 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. இந்தியா கூட்டணி 230 இடங்களை கைபற்றியது.பல்வேறு குழப்பங்களுக்கு அடுத்து கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு மூன்றாம் முறையாக நரேந்திர மோடி பிரதமராக உள்ளார்.
வணங்கிய மோடி
இந்த நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் அனைவரும் ஒருமனதாக மோடியை தலைவராகத் தேர்ந்தெடுத்த நாடாளுமன்றக் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு முன், அரசியலமைப்பு சபையில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முன் தலைவணங்கி வணக்கம் செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி,
பின்னர் கூட்டணி கட்சிகளின் தலைவர்களான சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் மற்றும் எச்.டி.குமாரசாமி ஆகியோருடன் பேசினார்.அப்போது பேசிய மோடி, “அரசாங்கத்தை நடத்த பெரும்பான்மை அவசியம், நாட்டை வழிநடத்த ஒருமித்த கருத்து அவசியம்” என்று கூறினார்.
Prime Minister Narendra Modi bows before India's Constitution ahead of the NDA Parliamentary Party meeting at the old parliament
— WION (@WIONews) June 7, 2024
Video: news agency ANI#ElectionsOnWION pic.twitter.com/wgH2MwvJZV