எலன் மாஸ்க் செய்த நற்செயல் - ஆனால் ஆபாச படத்துக்கு அடிமையான கிராம மக்கள்

Elon Musk Brazil World
By Karthikraja Jun 06, 2024 11:42 AM GMT
Karthikraja

Karthikraja

in உலகம்
Report

 எலான் மாஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் உலகின் பல பகுதிகளுக்கு இணைய சேவை வழங்கி வருகிறது.

எலான் மஸ்க்

உலக பணக்காரர்களில் ஒருவரானவர் எலான் மஸ்க். இவர் எக்ஸ் (X), ஸ்பேஸ் எக்ஸ் (Space X), தி போரிங் கம்பெனி (The Boring Company), நியுரா லிங்க் (Neuralink) போன்ற பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். டெஸ்லா (Tesla)  நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார். அப்படி அவர் நடத்தி வரும் முக்கியமான நிறுவனங்களில் ஒன்று தான் ஸ்டார்லிங்க்(Starlink). 

எலன் மாஸ்க் செய்த நற்செயல் - ஆனால் ஆபாச படத்துக்கு அடிமையான கிராம மக்கள் | Amazon Tribes Become Mobile Addict By Starlink

சாட்டிலைட் மூலம் தொலைதூர கிராமங்களுக்கும் இணைய சேவையை கொண்டு சேர்ப்பதே இந்நிறுவனத்தின் நோக்கம். உலகின் பல பகுதிகளுக்கு இதுபோல இணையச் சேவையை வழங்கி இருக்கிறது ஸ்டார்லிங்க். 

14 வயது சிறுவனுக்கு எலான் மஸ்க் Space X நிறுவனத்தில் வேலை - என்ன காரணம்?

14 வயது சிறுவனுக்கு எலான் மஸ்க் Space X நிறுவனத்தில் வேலை - என்ன காரணம்?

அமேசான் காடுகள்

தென் அமெரிக்காவின் அமேசான் காடுகளில் உள்ள ஒரு பழங்குடி கிராமத்தில் 2000 பேரை மட்டுமே கொண்ட மாருபோஸ் என்ற பழங்குடியினர் தனி மொழி, தனி கலாச்சாரத்துடன் வசித்து வருகின்றனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ஸ்டார்லிங்க் மூலம் முதல் முறையாக இவர்கள் இணையச் சேவையை பெற்றுள்ளனர். 

எலன் மாஸ்க் செய்த நற்செயல் - ஆனால் ஆபாச படத்துக்கு அடிமையான கிராம மக்கள் | Amazon Tribes Become Mobile Addict By Starlink

இந்த இணைய வசதி யாருமே எதிர்பார்க்காத தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அங்கு சென்ற சர்வதேச செய்தியாளர்களிடம் அந்த கிராமத்தை சேர்ந்த 73 வயதான சாய்னாமா மருபோ என்ற முதியவர் தெரிவித்துள்ளார்.

ஆபாசப் படம்

அவர் கூறியதாவது, "இந்த இணைய சேவை தொடக்கத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தாலும் கூட இப்போது எங்களை கவலையடைய வைத்துள்ளது. இணைய சேவை கிடைத்த போது தொலை தூரத்தில் இருக்கும் எங்கள் உறவினர்களுடன் வீடியோ கால் பேச முடிந்தது. ஆனால் இப்போது நிலைமை மோசமாகிவிட்டன. இணைய வசதி இளைஞர்களை மிகவும் சோம்பேறியாக மாற்றிவிட்டது" என்கிறார். 

மேலும் இது எங்களின் கலாச்சாரத்தை மொத்தமாக மாற்றி விட்டது, இங்குள்ள இளைஞர்கள் இப்போது மொபைல்களுக்கு அடிமையாகிவிட்டனர், 24*7 மொபைல் உடன் தான் இருக்கிறார். குறிப்பாக ஆபாசப் படங்களுக்கு அவர்கள் அடிமையாகி விட்டனர்." என வேதனையுடன் தெரிவித்தார். 

எலன் மாஸ்க் செய்த நற்செயல் - ஆனால் ஆபாச படத்துக்கு அடிமையான கிராம மக்கள் | Amazon Tribes Become Mobile Addict By Starlink

இது தொடர்பாக மாருபோ சங்கத்தின் தலைவரான ஆல்ஃபிரடோ மருபோ கூறுகையில், "பலரும் இப்போது ஆபாசப் படங்களுக்கு அடிமையாகிவிட்ட்டனர், இளைஞர்கள் குரூப் சாட்களில் ஓபனாகவே ஆபாச வீடியோக்களை பகிர்ந்து கொள்கிறார்கள், ஆபாச வீடியோக்களால் இளைஞர்கள் பெண்களிடம் ஆக்ரோஷமாக நடந்து கொள்வதாகவும் எங்கள் காதுகளுக்கு செய்திகள் வந்துள்ளன" என கூறியுள்ளார்.

நல்ல செயல்

இந்த இணைய சேவையால் ஆபாச படங்களுக்கு அடிமையாகி இருந்தாலும், பல நல்ல விஷயங்கள் அந்த கிராம மக்களுக்கு நடந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அங்குள்ள பல குழந்தைகள் இணையம் வழியாக கல்வி கற்க தொடங்கியுள்ளனர். பாம்புக் கடி போன்ற ஆபத்தான சூழல்களில் அவர்களால் உடனடியாக மருத்துவர்களை தொடர்பு கொள்ள முடிகிறது.

இதில் சிலர் ஏற்கனவே காப்பாற்றப்பட்டும் இருக்கிறார்களாம். மேலும், அங்குள்ள கிராம மக்கள் இணையம் மூலம் பல புதுப்புது விசயங்களை கற்று வருகின்றனர். எனவே, இணையம் என்பது கெடுதல் மட்டும் இல்லை, அதில் பல நல்ல விசயங்களும் அடங்கியுள்ளது. இணையத்தை நாம் எதற்காக பயன்படுத்துகிறோம் என்பதே முக்கியம்.