'டார்கெட்' பாஜக அலுவலகம் தான்.. பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் தீவிரவாதிகள் பரபரப்பு வாக்குமூலம்!

Karnataka Bengaluru Bomb Blast
By Vidhya Senthil Sep 10, 2024 08:35 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in இந்தியா
Report

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் குண்டு வைத்த தீவிரவாதிகள், முதலில் பாஜக அலுவலகத்தைக் குறிவைத்தாக தேசிய புலனாய்வு முகமை அதிர்ச்சி தகவலைத் தெரிவித்துள்ளது.

பெங்களூரு குண்டுவெடிப்பு

பெங்களூருவில் உள்ள பிரபல உணவகமான ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் கடந்த மார்ச் 1 ஆம் தேதி பயங்கர சத்தத்துடன் மர்மப்பொருள் வெடித்தது. இதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

benngaluru

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் குண்டு வெடிப்புக்குப் பின்னல் isis தீவிரவாத அமைப்புக்குத் தொடர்பு இருக்கலாம் எனக் கருதி மாநில அரசு தேசிய புலனாய்வு அமைப்பிடம் இந்த வழக்கை ஒப்படைத்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் 6 மாதத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர்.

இரட்டை குண்டுவெடிப்பு; 103 பேர் உடல் சிதறி பலி, 200 பேர் காயம் - இதுதான் காரணமா?

இரட்டை குண்டுவெடிப்பு; 103 பேர் உடல் சிதறி பலி, 200 பேர் காயம் - இதுதான் காரணமா?

இதனை தொடர்ந்து நேற்று பெங்களூருவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை தரப்பு வழக்கறிஞர் பிரசன்ன குமார் 1700 பக்க குற்றப்பத்திரிகையில் 429 சாட்சியங்களின் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தார்.


மேலும்  பெங்களூரு குண்டுவெடிப்பு குறித்துக் என்ஐஏ அதிகாரிகள்  கூறுகையில் : கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் கடந்த ஜனவரி 22-ம் தேதி அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட அன்று பெங்களூருவில் உள்ள பாஜகவின் மாநில அலுவலகத்தில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

தீவிரவாதிகள் வாக்குமூலம்

ஆனால் காவல்துறையின் பலத்த பாதுகாப்பு இருந்ததால் ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் குண்டுவெடிப்பை நடத்தியுள்ளனர். இது ஆதாரங்களுடன் குற்றப்பத்திரிகையில்  குறிப்பிட‌ப்பட்டுள்ளதாக  தெரிவித்தனர்.

blast

மேலும் இந்த சதித் திட்டத்துக்குக் கர்நாடக மாநிலம் ஷிமோகாவை அடுத்துள்ள தீர்த்தஹள்ளியைச் சேர்ந்த முசாஃபீர் உசேன், அப்துல் மதீன் தாஹா ஆகியோர் மூளையாகச் செயல்பட்டனர்.

அப்துல் மதீன் தாஹா வகுத்துக் கொடுத்த திட்டத்தின்படி முசாஃபீர் உசேன் குண்டுவைத்துள்ளார். இந்த இருவரும் ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பிலிருந்துள்ளனர் என்று தெரிவித்தனர்.