பெங்களூர் குண்டு வெடிப்பில் திக்திக் - குற்றவாளியை நெருங்கிய என்ஐஏ!
குண்டு வெடிப்பு தொடர்பாக, என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
குண்டு வெடிப்பு
பெங்களூரு, ப்ரூக்பீல்டில், ராமேஸ்வரம் கபே என்ற உணவகம் இயங்கி வருகிறது. இங்கு திடீரென குண்டு வெடித்ததில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வந்தனர்.
தொடர்ந்து இந்த வழக்கு தற்போது என்.ஐ.ஏ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக, சென்னை மண்ணடி, முத்தையால்பேட்டை, பிடாரியார் கோவில் தெரு உள்ளிட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
என்.ஐ.ஏ சோதனை
மேலும், ராமநாதபுரத்திலும், 4 இடங்களில், சோதனை நடந்து வருகிறது. முன்னதாக, முதற்கட்ட விசாரணையின்படி குண்டுவெடிப்பில் RDX போன்ற உயர்தர வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
தடயவியல் சோதனை மூலம் எந்த வகையான வெடிமருந்துகள் என்பதை கண்டுபிடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.