பெங்களூரில் பிரபல உணவகத்தில் குண்டு வெடிப்பு; வெளியான சிசிடிவி காட்சிகள் - நடந்தது என்ன?
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேயில் குண்டு வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குண்டு வெடிப்பு
கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள மிகவும் பிரபலமான உணவகங்களில் ஒன்றான ராமேஸ்வரம் கஃபே ஒயிட் லீட் கிளை 80 அடி சாலையில் அமைந்திருக்கிறது.
மதிய வேளையில், வழக்கம் போல் செயல்பட்டு கொண்டு இருந்த உணவகத்தில் திடீரென மர்ம பொருள் ஒன்று வெடித்து சிதறியது.
இதில் 3 ஊழியர்கள் மற்றும் ஒரு பெண் உட்பட 8 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
நடந்தது என்ன?
ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நடந்தது குண்டுவெடிப்புதான் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தகவல் வெளியிட்டு உள்ளார்.
இந்நிலையில், மர்ம நபர் ஒருவர் உணவகத்தில் வாடிக்கையாளரை போல் வந்து ரவா இட்லி ஆர்டர் செய்து சாப்பிடாமல் சென்றுவிட்டார்.
அவர் கையோடு கொண்டு வந்த பையை ஓட்டலில் வைத்து விட்டு சென்றதாகவும், அவர் விட்டு சென்ற பையிலிருந்த பொருள்தான் வெடித்ததாகவும் முதல் கட்ட சோதனையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, சிசிடிவியில் குற்றவாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர் சுமார் 28 முதல் 30 வயதுடையவராக இருப்பார் எனவும் தெரியவந்துள்ளது.