அலமாரிக்கு பின்னால் ரகசிய அறை; பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் - அதிர்ச்சி Video!

Viral Video India Jammu And Kashmir
By Jiyath Jul 08, 2024 06:14 AM GMT
Report

அலமாரிக்குப் பின்னால் பதுங்கு குழி அமைத்து பயங்கரவாதிகள் பதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

பயங்கரவாதிகள் 

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் பாதுகாப்புப் படையினர் அங்கு சென்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

அலமாரிக்கு பின்னால் ரகசிய அறை; பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் - அதிர்ச்சி Video! | Terrorists Killed Hide In Bunker Fake Cupboard

அப்போது அங்குள்ள ஒரு கிராமத்தில் உள்ள வீட்டில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சூடு சண்டை நடைபெற்றது.

முடிவுக்கு வந்த காத்திருப்பு; கைலாசா இங்குதான் உள்ளது - நித்யானதா அறிவிப்பு!

முடிவுக்கு வந்த காத்திருப்பு; கைலாசா இங்குதான் உள்ளது - நித்யானதா அறிவிப்பு!

பதுங்கு குழி

இதில் 2 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், பயங்கரவாதிகள் தரப்பில் 6 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து பயங்கரவாதிகள் தங்கியிருந்த வீட்டில் ராணுவத்தினர் சோதனை நடத்தினர். 

[

அப்போது அந்த வீட்டில் துணி வைக்கும் அலமாரிக்குப் பின்னால் சுவரில் ரகசிய பதுங்கு குழி அமைத்து, அதில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பான வீடியோ தற்போதோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  

[