பயங்கரவாத தாக்குதல்: பாகிஸ்தானுடன் இந்தியா ஆடக்கூடாது..? பிரதமருக்கு கடிதம்!
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
பயங்கரவாத தாக்குதல்
ஜம்மு காஷ்மீரில் கடந்த சில தினங்களாக பாகிஸ்தானிலிருந்து செயல்பட்டு வரும் பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அம்மாநிலத்தில் சுற்றுலா சென்ற பக்தர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், கத்வா மற்றும் தோடா மாவட்டங்களிலும் தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு சிஆர்பிஎப் வீரர் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 6 வீரர்கள் காயமடைந்தனர்.
இந்த தொடர் தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் டி20 உலகக்கோப்பை உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது.
வலியுறுத்தல்
இந்த தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் 'ஏ' பிரிவில் இடம்பெற்று விளையாடி வருகிறது. இந்நிலையில் பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக, டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியுடன் ஆட நேர்ந்தால்,
அந்த போட்டியை ரத்து செய்ய வேண்டும் என்று உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் செய்தி தொடர்பாளர் ஆனந்த் துபே, பிரதமர் மோடிக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். மேலும், இதன் நகலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, விளையாட்டுத்துறை மற்றும் பிசிசிஐ ஆகியோருக்கும் இணைத்துள்ளார்.