முடிவுக்கு வந்த காத்திருப்பு; கைலாசா இங்குதான் உள்ளது - நித்யானதா அறிவிப்பு!

Tamil nadu India Nithyananda Tiruvannamalai
By Jiyath Jul 04, 2024 08:09 AM GMT
Report

கைலாசா இருக்கும் இடத்தை வருகிற 21-ம் தேதி அறிவிக்க போவதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார்.

நித்யானந்தா

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் நித்யானந்தா. இவர் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஆசிரமம் ஒன்றை நடத்தி வந்தார். இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் நித்யானந்தாவுக்கு ஏகப்பட்ட சீடர்கள் உள்ளனர்.

முடிவுக்கு வந்த காத்திருப்பு; கைலாசா இங்குதான் உள்ளது - நித்யானதா அறிவிப்பு! | Where Is Kailash Nithyananda Break The Truth

இதனிடையே பாலியல் புகார், ஆள் கடத்தல், பண மோசடி என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய நித்யானந்தா, கடந்த 2019ம் ஆண்டு இந்தியாவிலிருந்து மாயமானார். இதனையடுத்து இந்துக்களுக்காக கைலாசா என்ற புதிய நாட்டை உருவாக்கி உள்ளதாக அவர் அறிவித்தார்.

மேலும், அந்நாட்டுக்கென தனி கொடி, பாஸ்போர்ட், கரன்சி ஆகியவற்றை வெளியிட்டதுடன், இந்தியர்கள் கைலாசா குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் நித்யானந்தா அறிவித்திருந்தார்.

உலகின் செலவு மிகுந்த நகரங்களின் பட்டியில் - சென்னை, மும்பைக்கு எந்த இடம் தெரியுமா?

உலகின் செலவு மிகுந்த நகரங்களின் பட்டியில் - சென்னை, மும்பைக்கு எந்த இடம் தெரியுமா?

கைலாசா எங்குள்ளது?

ஆனால், கைலாசா என்ற நாடு எங்குள்ளது என்பது இன்றுவரை புரியாத புதிராகவே இருந்து வருகிறது. இந்நிலையில் கைலாசா இருக்கும் இடத்தை வருகிற 21-ம் தேதி அறிவிக்க போவதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார்.

முடிவுக்கு வந்த காத்திருப்பு; கைலாசா இங்குதான் உள்ளது - நித்யானதா அறிவிப்பு! | Where Is Kailash Nithyananda Break The Truth

இதுதொடர்பாக அவரது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் "கைலாசா திறக்கப்பட்டுள்ளது. வருகிற 21-ம் தேதி குருபூர்ணிமா நன்னாளில் கைலாசா இருக்கும் இடம் அறிவிக்கப்படும். உங்களை அன்போடு வரவேற்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கைலாசா வாசியாக இப்போதே பதிவு செய்யுங்கள் என்று ஒரு ஆன்லைன் லிங்கும் குறிப்பிட்டுள்ளனர்.