தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் - புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!

Government of Tamil Nadu
By Thahir Jul 02, 2022 05:14 AM GMT
Report

தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் குறித்து புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வி ஆணையர் வெளியிட்டுள்ளார்.

இடைக்கால தடை 

அரசுப்பள்ளிகளில் காலியாகவுள்ள 13 ஆயிரத்து 300 பணியிடங்களில் உள்ள தற்காலிக ஆசிரியர்களை பணி நியமனம் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வி ஆணையர் கடந்த வாரம் வெளியிட்டிருந்தார்.

தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் - புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..! | Temporary Teachers Post Issue Of New Guidelines

இடைநிலை ஆசிரியர்கள்,பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் என்று 3 வகையான ஆசிரியர்களை நியமனம் செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்த பணி நியமனங்களை அந்தந்த பள்ளிகளில் இருக்கக்கூடிய பள்ளி நிர்வாகக்குழுவே மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்காலிக பணி நியமனம் செய்வதில் முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்திற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு 

இதையடுத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை அடுத்து புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வி ஆணையர் வெளியிட்டுள்ளார்.

வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கல்வித்தகுதி அடிப்படையில் சரியான முறையில் இந்த பணிநியமனங்களை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் காலியாக இருக்கக்கூடிய எல்லா விவரங்களை எல்லாம் அறிவிப்பு பலகையில் இன்று வெளியிட வேண்டும் என்றும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் வருகிற 4-ந் தேதி முதல் 6ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் மூலமாக நேரிலோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவரங்களை எல்லாம் ஆய்வு செய்து 6-ந்தேதி இரவு 8 மணிக்குள்ளாக அனைத்து விண்ணப்பங்களின் விவரங்களையும் பள்ளிக்கல்வி ஆணையருக்கு அனுப்ப வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கரூரில் இன்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!