ஆர்வமாய் சாட்டையடி வாங்கும் பக்தர்கள்- இப்படி ஒரு கோயில் திருவிழாவா? நேர்த்திக்கடனின் பின்னணி!
கோயில் திருவிழாவில் விநோத நேர்த்திக்கடன் செலுத்திய காட்சி பக்தர்களை மெய் சிலிர்க்க வைத்தது.
சாட்டையடி
அரியலூர் மாவட்டம் பெரிய தத்தூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரௌபதி மற்றும் செல்லியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தீமிதி திருவிழா நடைபெறும்.இதில் கலந்துகொள்ளும் பக்தர்கள் சாட்டையடி வாங்கி விநோத நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கமாக உள்ளது.
அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் விழா கோலாகலமாக தொடங்கியது. இதனையடுத்து, தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.
கோயில் திருவிழா
இந்த நிலையில், இவ்விழாவில் மிக முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா சிறப்பாக துவங்கியது. விழாவில் பங்கேற்ற நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதமிருந்து பிரத்யேகமாக அமைக்கப்பட்ட அக்னி குண்டத்தில் தீ மிதித்தனர்.
அதன்பிறகு, தீ மிதித்து வந்த பக்தர்கள் வரிசையாக நின்று அங்கு வீற்றிருக்கும் அம்மன் முன்பு சாட்டையடி வாங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதனை பார்த்த அருகில் இருந்த பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது