வறட்டியால் கடுமையாக தாக்கிகொண்ட மக்கள்; காயத்துடன் வழிப்பாடு - இப்படி ஒரு திருவிழாவா?
தெலுங்கு வருட பிறப்பு முடிந்த மறுநாள் இந்த வறட்டி அடி திருவிழா நடைபெற்றுள்ளது.
வறட்டி அடி திருவிழா
ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம் அருகே அஷ்வாரி என்னும் கிராமத்தில் அமைந்துள்ள வீரபத்திர சாமி மற்றும் பத்ரகாளியம்மன் கோயிலில், ஒவ்வொரு வருடமும் உகாதி பண்டிகை முடிந்த மறுநாள் வறட்டி அடி திருவிழா நடத்துவது வழக்கம்.
இதில் மக்கள் பலர் உற்சாகத்துடன் பங்கேற்பதுண்டு. இத்திருவிழாவிற்காகச் சேகரிக்கப்பட்ட வரட்டி சாணங்கள் தெருக்களில் குவிக்கப்பட்டிருக்கும். விழா தொடங்கியதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருபிரிவாக பிரிந்து ஒருவரை ஒருவர் வறட்டிகளால் தாக்கிக் கொண்டனர். கிட்ட தட்ட 30 நிமிடத்திற்கும் மேல் நடைபெற்றது.
காயத்துடன் வழிப்பட்டு
இந்த நிகழ்விற்க்கு பிறகு,பக்தர்கள் காயத்துடன் வீரபத்திர சுவாமிக்கும் பத்திரகாளி தேவிக்கும் திருக்கல்யாண உற்சவத்தை நடத்தி வழிபாடு செய்தனர்.இதனை காண அப்பகுதியில் இருந்த ஏராளமான மக்கள் வருகை புரிந்தனர். பின்னர் வழங்கப்பட்ட விபூதி பிரசாதத்தை வாங்கி உடம்பில் உள்ள காயங்கள் மீது பூசிக் கொண்டனர்.
திரேதாயுகத்தில் வீரபத்திர சுவாமியும், பத்திரகாளி தேவியும் காதல் செய்து வந்ததாக வரலாறில் கூறப்படுகிறது. அதன்படி, வீரபத்திர சுவாமி திருமணதிற்குத் தாமதம் செய்ததாகவும், இதனால் காதலித்து திருமணம் செய்யாமல் ஏமாற்றி விட்டதாகப் பத்திரகாளி தரப்பினர் தவறாகப் புரிந்து கொண்டு வீரபத்திர சுவாமியைச் வரட்டி சாணத்தால் தாக்க முயற்சி செய்ததாக அப்பகுதி மக்கள் இடையே ஒர் ஐதிகம் இருந்து வருகிறது.