லொகேஷனைக் காட்டிக்கொடுக்கும் வசதி - டெலிகிராம் முக்கிய முடிவு!
டெலிகிராம் செயலியில் முக்கிய வசதி நீக்கப்பட்டுள்ளது.
டெலிகிராம்
உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்று டெலிகிராம். இதனை பாவெல் துரோவ் மற்றும் அவரது சகோதரர் நிகோலா துரோவ் இணைந்து தொடங்கினர்.
இதில் தனிநபர்களுக்கு இடையே, குரூப் மற்றும் சேனல்ஸ் என இதன் பயனர்கள் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள முடியும். 950 மில்லியன் பயனர்கள் ஆக்டிவாக பயன்படுத்தி வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாட்ஸ்அப், சிக்னல்ஸ் போன்ற மெசஞ்சர்களில் உள்ளது போல Encryption ஆப்ஷனை டெலிகிராமும் வழங்குகிறது. ஆனால், அது டீபால்டாக வழங்கப்படுவதில்லை. இந்த செயலியை தீவிரவாதிகள், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் பயன்படுத்துவதாக பிரான்ஸ் புலனாய்வு பிரிவினர் கண்டறிந்துள்ளனர்.
முக்கிய வசதி நீக்கம்
தொடர்ந்து, கடந்த 2022-ல் உள்நாட்டு சட்ட விதிகளுக்கு உட்படாத காரணத்தால் சுமார் 5 மில்லியன் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில், பண மோசடி மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றச் செயல்களுக்கு டெலிகிராம் துணை போவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், அந்த செயலியில் நடக்கும் சட்டவிரோதமான செயல்களை தடுத்து நிறுத்த தவறிவிட்டதாகக் கூறி தலைமை நிர்வாக இயக்குனர் பாவெல் துரோவை பிரான்ஸ் அரசு கைது செய்து பின்னர் நிபந்தனை ஜாமீனில் வெளியில் விடப்பட்டார்.
தற்போது, டெலிகிராம் செயலில் இருந்து தனிநபர்களின் லொகேஷன்களை மற்றவர்களுக்கு காட்டிக்கொடுக்கும் வசதி நீக்கப்பட்டுள்ளது. தனிநபர் பாதுகாப்பு வசதியை மேம்படுத்த டெலிகிராம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.