வங்கிக் கணக்கில் பணம் இல்லையா? இனி.. PhonePe இருந்தால் போதும்!

Money
By Sumathi Aug 27, 2024 06:47 AM GMT
Report

ஃபோன்பே முக்கிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஃபோன்பே

முன்னணி UPI இயங்குதளங்களில் ஒன்று டிஜிட்டல் பேமெண்ட் நிறுவனமான PhonePe. இது அண்மையில் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

phonepe

அதன்படி, கிரெடிட் லைன் சேவைகளை வழங்கியுள்ளது. இதன்மூலம், வங்கிக் கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் பணம் செலுத்த முடியும். வாடிக்கையாளர்கள் வங்கிகளிடமிருந்து கிரெடிட் லைன் வசதியைப் பெற்றிருந்தால், அந்த கிரெடிட் லைனை PhonePe உடன் இணைக்கலாம்.

Google Pay-வில் தவறா யாருக்கும் பணம் அனுப்பிட்டீங்களா! எப்படி திரும்ப பெறுவது?

Google Pay-வில் தவறா யாருக்கும் பணம் அனுப்பிட்டீங்களா! எப்படி திரும்ப பெறுவது?

கிரெடிட் லைன்

இதனால் PhonePe விலிருந்து கிடைக்கும் கடன் மூலம் வணிகர்களுக்கு பணம் செலுத்தலாம். குறுகிய கால கடன் வசதியும் பெறலாம். PhonePe பயனர்கள் சுயவிவரப் பகுதிக்குச் செல்ல வேண்டும். அங்கு வங்கி விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் கிரெடிட் லைன் வசதியுடன் கூடிய வங்கியின் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்.

வங்கிக் கணக்கில் பணம் இல்லையா? இனி.. PhonePe இருந்தால் போதும்! | Phonepe Enables Credit Line On Upi Details Here

பின்னர் இணைக்க வேண்டும். அதன்பின், UPI பின்னை அமைக்க வேண்டும். இந்த செயல்முறை முடிந்ததும் கடன் விருப்பத்தையும், கட்டணப் பக்கத்தையும் பார்க்கலாம். அண்மையில் கர்நாடகா வங்கி மற்றும் நிதிச் சேவை நிறுவனமான நவி டெக்னாலஜிஸ் UPI சேவையில் இந்த கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.