Google Pay-வில் தவறா யாருக்கும் பணம் அனுப்பிட்டீங்களா! எப்படி திரும்ப பெறுவது?
Google Pay-வில் தவறுதலாக அனுப்பிய பணத்தை மீட்பது குறித்த வழிமுறைகளை பார்ப்போம்.
Google Pay
கூகுள் பே (google pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற யுபிஐ செயலிகளின் மூலம் ஒருவருக்கொருவர் பணம் பரிமாற்றம் செய்வது, மிகவும் பயனுள்ள வகையில் இருந்து வருகிறது.
இதில், பணத்தை தவறுதலான UPI ID-க்கு அல்லது வேறு மொபைல் எண்ணுக்கு பணத்தை செலுத்திவிட்டாலும், உங்களுக்குத் தெரியாமல் பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டு இருந்தாலும், ஒருவேளை நீங்கள் மோசடி செய்யப்பட்டிருந்தாலும் உங்கள் பணத்தைத் திரும்பப் பெற முயற்சி செய்யலாம்.
வழிமுறைகள்
ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, தவறான பணப் பரிமாற்றம் நடந்தால், 24-48 மணி நேரத்தில் உங்களது பணத்தைத் திரும்பப் பெறலாம். பணம் பெறுபவர் மற்றும் பணம் செலுத்துபவர் வங்கிகள் ஒரே வங்கியாக இருந்தால், பணத்தைத் திரும்பப் பெறுவதற்குக் குறைந்த நேரம்தான் எடுக்கும்.
வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொண்டு புகார் கொடுக்கலாம். பரிவர்த்தனையைத் திரும்பப் பெற வழிகாட்டுவார்கள். அனுப்பிய பணத்தைத் திரும்பப் பெற பல வங்கிகள் டிரான்ஸாக்ஷன் ரி-கால் போன்ற அம்சங்களை வழங்குகின்றன.
இதில் தீர்வு கிடைக்கவில்லையென்றால், ஆர்பிஐ அமைப்பின் NPCI portal இணையப் பக்கத்தில் புகார் அளிக்கலாம்.
இதைச் செய்தால் சில மணி நேரத்தில் பணத்தை திரும்ப பெறலாம்.