பிளிப்கார்ட் Big Billion Days - இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்
பிளிப்கார்ட் Big Billion Days sale தொடங்கும் தேதி இணையத்தில் வெளியாகியுள்ளது.
பிக் பில்லியன் டேஸ்
பிரபல இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் ஒவ்வொரு வருடமும் பிக் பில்லியன் டேஸ் (Big Billion Days) விற்பனை நிகழ்வை நடத்துகிறது.
இந்த விற்பனையில், எலக்ட்ரானிக் பொருட்கள் முதல் வீட்டு உபயோகப் பொருட்கள் வரை அனைத்து வகையான பொருட்களுக்கும் சிறந்த தள்ளுபடி வழங்கப்படுகிறது.
1.4 பில்லியன் வாடிக்கையாளர்கள்
இதனால் ஆன்லைன் ஷாப்பிங் பிரியர்கள் இந்த நிகழ்வை உற்று நோக்கி காத்திருக்கின்றனர். கடந்த 2023 ஆண்டு அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கிய பிக் பில்லியன் டேஸ் நிகழ்வு ஒரு வார காலம் நடைபெற்றது.
இந்த நிகழ்வின் போது 1.4 பில்லியன் வாடிக்கையாளர்கள் பிளிப்கார்ட் இணையதளத்திற்கு வருகை தந்ததாகவும், 100 பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் விற்பனையானதாகவும் பிளிப்கார்ட்டின் தாய் நிறுவனமான வால்மார்ட் தெரிவித்துள்ளது.
2024 பிக் பில்லியன் டேஸ் தேதி
தற்போது இந்த ஆண்டிற்கான பிக் பில்லியன் டேஸ் பிளிப்கார்ட் பிளஸ் உறுப்பினர்களுக்கு மட்டுமே செப்டம்பர் 29 ஆம் தேதி தொடங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மற்ற வாடிக்கையாளர்கள் செப்டம்பர் 30ம் தேதி முதல் பொருட்களை வாங்கலாம். இந்த விற்பனை ஒரு வாரத்துக்கு நடக்கும் என தெரிய வந்துள்ளது.
இந்த பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் Apple, Samsung, one plus போன்ற முன்னணி ஸ்மார்ட் போன்களுக்கு மிகப்பெரிய சலுகைகள் மற்றும் தள்ளுபடி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.