Telegram செயலிக்கு இந்தியாவில் தடையா? விசாரணையை தொடங்கும் மத்திய அரசு
டெலிகிராம் செயலியில் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக எழுந்த புகாரையடுத்து செயலியை மத்திய அரசு தடை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெலிகிராம்
டெலிகிராம்(Telegram) செயலி உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வாட்சப் போல் இந்த செயலியில் அழைப்பு மேற்கோள்வது, குறுஞ்செய்தி படங்கள், வீடியோ அனுப்புவது, குரூப் சாட் என சகல வசதிகளும் உண்டு.
இந்நிலையில், டெலிகிராம் செயலில் நடைபெறும், தீவிரவாத இயக்கங்களுக்கு துணைபோவது, போதைப் பொருள் விநியோகம், மோசடி, சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை அனுமதிப்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், 2 நாட்களுக்கு முன் டெலிகிராம் நிறுவனர் பாவல் துரோவ் பிரான்ஸ் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
இதனையடுத்து, இந்தியாவில் டெலிகிராம் சார்ந்து பெறப்பட்டுள்ள புகார்கள் என்ன? நிலுவையில் உள்ள அந்த புகார்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து உள்துறை அமைச்சகத்தை தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
சமீபத்தில் நீட் வினாத்தாள்கள் டெலிகிராம் செயலில் 5000ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. ஏற்கனவே சிறார் பாலியல் துஸ்பிரயோக ஆவணங்கள் டெலிகிராம் மூலம் பயப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்பொழுதே தடை செய்ய குரல் எழுந்த போது அந்த ஆவணங்களை நீக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.
தற்போது மத்திய அரசு டெலிகிராம் மீதான புகார்களை விசாரிக்கும் நிலையில் அவை சட்ட விதிகளை மீறுவதாக அமைந்தால் தடை விதிக்க வாய்ப்பு உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மக்களிடையே புழக்கத்தில் இருந்த டிக்டாக் போன்ற செயலிகள் இந்திய சட்ட விதிகளை மீறுவதாக கூறி தடை விதிக்கப்பட்டுள்ளது.