Telegram நிறுவனர் அதிரடி கைது - என்ன காரணம்?
டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் பிரான்ஸில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
டெலிகிராம்
டெலிகிராம்(Telegram) செயலி உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வாட்சப் போல் இந்த செயலியில் அழைப்பு மேற்கோள்வது, குறுஞ்செய்தி படங்கள், வீடியோ அனுப்புவது, குரூப் சாட் என சகல வசதிகளும் உண்டு.
இந்த செயலி 2013 ஆம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த பாவெல் துரோவ்(Pavel Durov)என்பவரால் உருவாக்கப்பட்டது. இதன் தலைமை அலுவலகம் துபாயில் உள்ளது. பாவெல் துரோவ், துபாய் மற்றும் பிரான்ஸில் இரட்டை குடியுரிமை வைத்துள்ளார்.
குற்றச் செயல்
இந்நிலையில், அஜெர்பைஜானில் இருந்து தனி விமானம் மூலம் செல்லும் போது பாரிஸ் அருகே உள்ள பொர்காட் விமான நிலையத்தில் வைத்து பாவல் துரோவை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
ஏற்கனவே டெலிகிராம் செயலில் நடைபெறும், தீவிரவாத இயக்கங்களுக்கு துணைபோவது, போதைப் பொருள் விநியோகம், மோசடி, சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை அனுமதிப்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவுக்கு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு இருந்தது.