இனி Whatsapp ல் செய்தி அனுப்ப நம்பர் தேவை இல்லை - வெளியாக உள்ள அசத்தல் அப்டேட்
வாட்சாப் செயலில் புதிய அப்டேட் வர உள்ளது.
வாட்சப்
வாட்சப் செயலி செய்தி அனுப்பும் செயலியாக 2009 ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் பின்னர் கால் பேசுவது தொடங்கி புகைப்படம் வீடியோ அனுப்புவது பணப்பரிமாற்றம் செய்வது வரை பல வசதிகளுடன் இந்த செயலி மேம்படுத்தபட்டுள்ளது.
2014 ம் ஆண்டு பேஸ்புக் நிறுவனம் வாட்சப் செயலியை $19 பில்லியன் (இந்திய மதிப்பில் 1,14,000கோடி) க்கு வாங்கியது. தற்போது 2 பில்லியனுக்கு மேற்பட்ட பயனர்கள் உலகம் முழுவதும் வாட்சப்பை பயன்படுத்தி வருகின்றனர்.
அப்டேட்
வாட்சப்பில் ஒருவருக்கு செய்தி அனுப்ப அவரின் மொபைல் எண் கட்டாயம் வேண்டும். அதன் மூலமே ஒருவருக்கு செய்து அனுப்ப முடியும். இந்நிலையில் வாட்சப்பில் புதிதாக வரவுள்ள அப்டேட்டில் அதற்கான தேவை இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
WABetaInfo வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி, இனி தொலைபேசி எண்களுக்கு பதிலாக பயனர் பெயரை (username) பயன்படுத்தி தகவல் பரிமாறிக்கொள்ளும் வகையில் வாட்சப் மேம்படுத்தப்பட உள்ளது. மற்ற சமூக வலைத்தளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போல் இதிலும் பயனர்கள் தங்களுக்கு விருப்பமான பயனர் பெயரை உருவாக்கி கொள்ளலாம். ஆனால் அந்த பெயரை ஏற்கனவே ஒருவர் பயன்படுத்தி இருக்க கூடாது.
இதன் மூலம் தொலைப்பேசி எண் இல்லாமலேயே பயனர்பெயர்களை பயன்படுத்தி ஒருவரை தொடர்பு கொள்ள முடியும். இது முதலில் வாட்சப் வெப் (Whatsapp Web) பயனர்களுக்கே வர உள்ளது. மேலும் யாரெல்லாம் உங்களுக்கு செய்தி அனுப்ப முடியும் என்ற வகையில் என செட்டிங்ஸில் மாற்றம் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த அப்டேட் எப்போது வரும் என்பது குறித்த அதிகாரபூர்வ தகவல் இல்லை.