ரஜினிகாந்த் தொடங்கி வைத்த செயலியை இழுத்து மூடும் சௌந்தர்யா ரஜினிகாந்த் - ஏன் தெரியுமா?
சௌந்தர்யா ரஜினிகாந்த் தான் தொடங்கிய செயலியை மூடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சௌந்தர்யா ரஜினிகாந்த்
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ், வாட்சப் போன்ற சமூக வலைதள செயலிகளை உலகம் முழுவதும் பல கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இதே போல் கடந்த 2021 ம் ஆண்டு சௌந்தர்யா ரஜினிகாந்த் 'ஹூட்' என்ற குரல்வழி சமூக வலைதள செயலியை அறிமுகப்படுத்தினர்.
இந்த செயலி தமிழ் உட்பட 15 இந்திய மொழிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் பயனர்கள் 60 நொடிகளுக்கு தங்கள் கருத்துக்களை குரல் வழியாக வெளியிடலாம். இதில் முதல் குரலை ரஜினிகாந்த் வெளியிட்டார்.
ஹூட்
மேலும் இதில் ஏ.ஆர்.ரகுமான், ஆனந்த் மகேந்திரா, தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின், கௌதம் கம்பீர் உள்ளிட்ட பலரும் இதில் இணைந்திருந்தனர். இந்த செயலி மக்களிடையே போதிய வரவேற்பை பெறவில்லை தற்போது வரை ஒரு லட்சம் பேர் மட்டுமே இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர்.
போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் இந்த செயலி மூடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் இது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஏற்கனவே போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் Koo என்கிற செயலி சமீபத்தில் மூடப்பட்டது.