இந்தியாவின் டிவிட்டர்.. பிரபல செயலி 'கூ (Koo)' முடிவுக்கு வந்தது - என்ன காரணம்?
கூ (Koo) செயலி நிரந்தரமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கூ (KOO) செயலி
பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட போம்பிநெட் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தால் கடந்த 2020- ம் ஆண்டு டிவிட்டருக்கு (தற்போது X) போட்டியாக கூ (Koo) செயலி தொடங்கப்பட்டது . இதனை அப்ரமேயா ராதாகிருஷ்ணா மற்றும் மயங்க் ஆகியோர் துவங்கினர்.
இந்த சமூக வலைத்தளத்தை தமிழ், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பயன்படுத்த முடியும். இதனை தினமும் 21 லட்சம் பேர் பயன்படுத்தினர். மாதல் 1 கோடி பயனர்கள் இருந்தனர். மேலும், இதில் 9,000 பிரபலங்கள் இருந்தனர்.
என்ன காரணம்?
இதனிடையே நிதி நெருக்கடி மற்றும் தொழில்நுட்ப சேவைகளை வழங்குவதற்கான பராமரிப்பு செலவு உள்ளிட்ட பல பிரச்சனைகளால் இந்த நிறுவனம் ஸ்தம்பித்தது. இதனால் இந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது கூ (Koo) செயலி நிரந்தரமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சில ஆண்டுகள் கழித்து மீண்டும் வருவோம் என்றும், வேறு வழியில் நீங்கள் எங்களை எதிர்பார்க்கலாம் என்றும் நிறுவனத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.