தாய் செய்த செயல் - ஆத்திரத்தில் சேலையை உருவி கழுத்தை நெறித்தே கொன்ற மகன்!
பணம் தராததால் ஆத்திரத்தில் தாயின் சேலையை உருவி மகன் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகன் தொந்தரவு
தெலுங்கானா ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள ஷாத்நகரைச் சேர்ந்தவர் சுகுணம்மா. இவரது மகனுடன் (20) வசித்து வருகின்றார். இவர் அடிக்கடி தாயிடன் சண்டையிட்டு பணம் வாங்கி செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
அதன்படி, சம்பவத்தன்று செலவிற்காக தாயிடம் பணம் கேட்டுள்ளார். இதற்கு தன்னிடம் பணமில்லை என்று தாய் கூறியதில் ஆத்திரமடைந்த மகன் அவரை கொடூரமாக தாக்கியுள்ளார். அதன் பின் அவரது சேலையை உருவி கழுத்தை நெறித்தே கொன்றுள்ளார்.
தாய் கொடூர கொலை
இச்சம்பவத்தினை தடுக்காமல் அருகிலிருந்தவர்கள் வீடியோ எடுத்து அதனை வாட்ஸ் ஆப்களில் பகிர்ந்துள்ளனர். தொடர்ந்து, தாயை கொன்றது தெரியாமல் இருப்பதற்காக இறுதி சடங்கினை நடத்தியுள்ளார். தாய் உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால், சம்பவம் குறித்து அறிந்த போலீஸார் உடனே விரைந்து வந்து உடலை மீட்டு மகனை கைது செய்துள்ளனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.