பல ஆண்களுடன் தகாத உறவில் தாய் - ஆத்திரத்தில் மகள் செய்த வினோத செயல்!
தாயின் செயல்கள் பிடிக்காத மகள் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகாத உறவு
ஆந்திரா, புதிய சேனம்பட்லா கிராமத்தை சேர்ந்தவர் இளம்பெண் கீர்த்தி(19). இவர் தனது தாயுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், பீரோவில் திடீரென்று ஒரு நாள் தீ பற்றி எரிந்துள்ளது. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அதனை அணைத்துள்ளனர்.
தொடர்ந்து, கீர்த்தியின் தாய் தூங்கி கொண்டிருந்தபோது அவருடைய சேலை தீப்பற்றி எரிந்தது. அதனை உடனே அணைத்து உயிரை காப்பாற்றி கொண்டார். இப்படி இந்த சம்பவம் தொடர்ந்து நடப்பதால் பில்லி சூனியம் வைத்திருக்கின்றார்கள் என்று எண்ணி வீட்டிற்கு பூஜை போட்டுள்ளனர்.
மகளின் செயல்
இந்நிலையில், சில நாட்களுக்குப் பின் ஊரில் உள்ள வைக்கோல் போர்கள், ஒரு சில வீடுகள் ஆகியவற்றிலும் சிறிய அளவிலான தீ விபத்துக்கள் ஏற்பட்டன. இதனால் பயந்த மக்கள் மந்திரவாதிகள்,பூசாரிகள் என அழைத்து அவர்கள் கூறிய அனைத்தையும் செய்து பார்த்துள்ளனர்.
ஆனாலும், இந்த தீ விபத்துகள் தொடர்ந்துள்ளது. இதனால், கிராம மக்கள் போலீஸில் புகாரளித்தனர். அதன் அடிப்படையில் தீவிரமாக விசாரித்ததில் கீர்த்தியை பிடித்து விசாரித்தனர். அதில், டத்தை சரியில்லாத தன்னுடைய தாய், அதே ஊரில் உள்ள சிலருடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்தார்.
நடந்தது என்ன?
எனக்கு இது பிடிக்கவில்லை. எனவே ஊரை காலி செய்துவிட்டு வேறு ஊருக்கு சென்று வசிக்கலாம் என்று என் தாயிடம் கூறினேன். அவர் கேட்கவில்லை. எனவே, எப்படியாவது வீட்டை காலி செய்து விட்டு வேறு ஊருக்கு செல்ல வேண்டும் என்பதற்காக முதலில் நாங்கள் வசிக்கும் வீட்டில் இருக்கும் பீரோவுக்கு தீ வைத்தேன். அப்போது பீரோவில் 35 ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது.
அதில் 2500 ரூபாய் எறிந்து விட்ட நிலையில் 32,500 பணம் தப்பியது. என் தாய்க்கு பயத்தை ஏற்படுத்த அவர் தூங்கி கொண்டிருந்தபோது சேலையில் தீ வைத்தேன். அப்போதும் என் தாய் வீட்டை காலி செய்து வேறு ஊருக்கு செல்ல மறுத்துவிட்டார். எனவே அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் வசிக்கும் வீடுகள், அவர்களுடைய வைக்கோல் போர்கள் ஆகியவற்றிற்க்கு தீ வைத்தேன்.
இந்த விவகாரம் பெரும் பிரச்னையாக மாறி கைது செய்யப்பட்டு இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். அதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.