நண்பனின் சொத்து; 7 நாளில் 6 பேர் - குடும்பத்தையே கொன்ற பகீர் சம்பவம்!
இளைஞர் நண்பனின் வீட்டை அபகரித்து 6 பேரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நண்பன் சொத்து
தெலங்கானா, ட்டுகூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பிரசாத் மற்றும் பிரசாந்த். இருவரும் சிறுவயதில் இருந்தே நெருங்கிய நண்பர்கள். தொழிலில் நஷ்டத்தால் பிரசாத் பலரிடம் லட்சக்கணக்கில் கடன் வாங்கியுள்ளார்.
பிரசாத் பெயரில் இருக்கும் வீட்டை தன்னுடைய பெயருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்தால் வங்கியில் இருந்து உடனே கடன் வாங்கி விடலாம் என்று பிரசாந்த் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, பத்திரப்பதிவு செய்தும் கொடுத்தார்.
6 பேர் கொலை
நீண்ட நாட்கள் கடந்தும் பிரசாந்த் வங்கியில் இருந்து கடன் வாங்கி கொடுக்கவில்லை. இதனால், வீட்டை தனது பெயருக்கு மாற்ற பிரசாத் கேட்டுள்ளார். இதனால், பிரசாத்தை அதே பகுதியில் உள்ள டிச்சிப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை அருகில் காட்டுப்பகுதியில் கொலை செய்து உடலை புதைத்து விட்டார்.
பிரசாத்தை போலீசார் பிடித்து வைத்திருப்பதாக தெரிவித்து அவரது மனைவி ரமாவையும் அழைத்துச்சென்று கொலை செய்து நதியில் வீசியுள்ளார். மேலும், பிரசாத்தின் தங்கையிடம் சென்று அண்ணன் மற்றும் அவரது மனைவி ரமாவையும் போலீசார் பிடித்து வைத்திருப்பதாக கூறி அவரையும் கொலை செய்துள்ளார்.
4 பேர் கைது
பிரசாத்தின் குழந்தைகள் 2 பேரையும் கொலை செய்தது உடல்களை ஓடையில் வீசியிருக்கிறார். பிரசாத்தின் மற்றொரு தங்கையையும் இதேபோல் கூறி அழைத்துச் சென்று அவருடைய உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் பாதி எரிந்த நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக மக்கள் போலீஸாருக்கு புகாரளித்துள்ளனர்.
விசாரணையில், செல்போன் எண் மூலம் பிரசாந்தை பிடித்து கைது செய்துள்ளனர். அவரது சகோதரர் மற்றும் கூட்டாளிகள் இரண்டு பேர் என நான்கு பேரை கைது செய்துள்ளனர்.