ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் வெட்டிக் கொலை: நள்ளிரவில் நடந்த பயங்கரம்

murder investigation
By Fathima Apr 15, 2021 08:25 AM GMT
Report

இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 வயது குழந்தை உட்பட ஆறு பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவின் விசாகப்பட்டினம் மாவட்டம் ஜுட்டாடா கிராமத்தை சேர்ந்தவர் ராமாராவ், நேற்றிரவு தன்னுடைய குடும்பத்தினருடன் உறங்கிக் கொண்டிருந்தார்.

நள்ளிரவில் அவர்களது வீட்டின் அருகில் வசித்து வந்த அப்பல்ராவ் என்பவர் வீட்டினுள் நுழைந்தவுடன் தூங்கிக் கொண்டிருந்தவர்களை கொடூரமாக கொன்றுள்ளார்.

முதலில் ராமாராவ், அவரது மனைவி உஷா, அதே குடும்பத்தை சேர்ந்த ரமாதேவி, அருணா, 2 வயது மகன் உதய், இரண்டு மாத குழந்தை ஊர்நிஷா ஆகிய 6 பேரையும் அடுத்தடுத்து வெட்டிக் கொன்றுள்ளார்.

இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவர, உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, விரைந்து வந்த அதிகாரிகள் 6 பேரின் சடலங்களை கைப்பற்றி விசாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து நீண்ட தேடுதல் வேட்டைக்கு பின்னர் அப்பல்ராவை போலீசார் கைது செய்தனர், அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், முன்பகை காரணமாக கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் வெட்டிக் கொலை: நள்ளிரவில் நடந்த பயங்கரம் | Sir Members Of Same Family Killed Visakhapatnam