நிலத்தகராறு பிரச்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சுட்டு கொலை - அதிர்ச்சி சம்பவம்!
மத்திய பிரதேஷத்தில் இரு குடும்பத்திற்கும் இடையே ஆன நில பிரச்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப தகராறு
மத்திய பிரதேஷ் மாநிலம், மொரேனா மாவட்டத்தில் லெபா என்னும் கிராமத்தை சேர்ந்தவர்கள் தீர் சிங் தோமர் மற்றும் கஜேந்திர சிங் தோமர். கடந்த 2013-ம் ஆண்டு இரு குடும்பத்தினருக்கும் இடையே குப்பை கழிவுகளை கொட்டுவது தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டது.
அப்போது தீர் சிங் குடும்பத்தில் இருவர் கொல்லப்பட்டனர். கஜேந்திர சிங் குடும்பத்தினர் ஊரை விட்டு வெளியேறினர்.
சுட்டுக்கொலை
இந்நிலையில், நீதிமன்றம் மூலமாக இரு குடும்பத்தினருக்கும் சமரசம் செய்து வைத்தனர். தற்போது கஜேந்திர சிங் மீண்டும் குடும்பத்தினுடன் கிராமத்திற்கு வந்தபொழுது, தீர் சிங் குடும்பம் துப்பாக்கியால் அவர்களை சுட்டு கொன்றதாக கூறுகின்றனர்.
இதில், கஜேந்திர சிங், அவரது இரண்டு மகன்கள் மற்றும் 3 பெண்களும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும், 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து, போலீசார் விசாரணை மேற்கொண்டதில். இரு குடும்பத்திற்கும் இடையே நடந்த பழைய பகை தான் காரணம் என்று தெரியவந்துள்ளது.