மத்திய பிரதேசத்தில் தொடர்ந்து கண்டெடுக்கப்படும் டைனோசர் முட்டைகள் : வியப்பில் பொதுமக்கள்
உலகில் பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த டைனோசர்களின் முட்டைகள் மத்திய பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
டைனோசர்கள்
உலகில் மனித இனம் வாழும் முன்பே வாழ்ந்த டைனோசார்கள் பற்றிய் ஆராய்ச்சி தற்போது வரை தொடர்கின்றது, இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் 20க்கும் மேற்பட்ட டைனோசர் முட்டைகள் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளன.
டெதிஸ் கடல், நர்மதை ஆற்றுடன் இணையும் இடத்தில் உருவான கழிமுகத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ள இந்த டைனோசர் முட்டைகள் கூடுகளுடன் அமைந்திருந்துள்ளன. கூடுகள் ஒவ்வொன்றும் அருகருகே அமையப்பெற்றுள்ளன
ஆராய்ச்சிக்கு அனுப்பி வைப்பு
இந்த முட்டைகளை எடுத்து ஆராய்ச்சிக்காக அனுப்பியுள்ளனர். கடந்த 2020ம் ஆண்டில் நடத்தப்பட்ட கள ஆய்வுகளின்போது தார் மாவட்டத்தில் பல கிராமங்களில் டைனோசர் முட்டைகள் மற்றும் படிவங்கள் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.