முன்னாள் முதல்வர் மகள் கவிதா கைது - டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்!

Telangana
By Sumathi Mar 16, 2024 04:31 AM GMT
Report

முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா கைது செய்யப்பட்டுள்ளார்.

கவிதா

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா. இவர் தெலங்கானா மேலவை உறுப்பினராக உள்ளார். டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கவிதா மீது குற்றம்சாட்டப்பட்டது.

kavitha

இந்நிலையில், டெல்லியில் இருந்து வருமான வரி மற்றும் அமலாக்க துறை அதிகாரிகள் 10 பேர், ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள கவிதாவின் வீட்டுக்கு சென்றனர்.

மகளிருக்கு மாதம் ரூ.3000.. கியாஸ் சிலிண்டர் ரூ.400 - முதல்வர் வாவ் வாக்குறுதி!

மகளிருக்கு மாதம் ரூ.3000.. கியாஸ் சிலிண்டர் ரூ.400 - முதல்வர் வாவ் வாக்குறுதி!

அமலாக்கத்துறை நடவடிக்கை

அங்கு, கவிதா, அவரது கணவர் அனில்உட்பட வீட்டில் இருந்த அனைவரது செல்போன்களையும் கைப்பற்றிய பிறகு, 4 மணி நேரம் தீவிரசோதனை நடத்தினர். பின், டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கவிதா மூலமாக ரூ.100 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாக கூறி வாரன்ட் வழங்கிய அமலாக்கத் துறையினர் அவரை கைது செய்தனர்.

முன்னாள் முதல்வர் மகள் கவிதா கைது - டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்! | Telangana Cm Kcr S Daughter Kavitha Arrested

இதற்கிடையில், கவிதா வீடு முன்பு பிஆர்எஸ் கட்சியினர் பெருமளவில் குவிந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். தொடர்ந்து, கவிதாவை அமலாக்கத் துறையினர் விமானத்தில் டெல்லிக்கு அழைத்து சென்றனர். அதனையடுத்து, அவரை அமலாக்கத் துறை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.