மகளிருக்கு மாதம் ரூ.3000.. கியாஸ் சிலிண்டர் ரூ.400 - முதல்வர் வாவ் வாக்குறுதி!

Telangana Election
By Vinothini Oct 16, 2023 06:45 AM GMT
Report

தெலுங்கானாவில் ஆட்சிக்கு வந்தால் 400 ரூபாய்க்கு சிலிண்டர் வழங்கப்படும் என்று சந்திரசேகர ராவ் வாக்குறுதி வழங்கியுள்ளார்.

நெருங்கும் தேர்தல் களம்

தெலங்கானா மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல், அடுத்த மாதம் 30-ம் தேதி நடைபெறவுள்ளது. அங்கு ஆளும் கட்சி மற்றும் காங்கிரஸுக்கு இடையே கடும் போட்டி நடந்து வருகிறது. தேர்தல் நெருங்கும் சூழலில், ஆளுங்கட்சியான பாரத ராஷ்டிர சமிதி தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.

telangana-promises-by-telangana-cm-chandrasekhar

அதனை கட்சித் தலைவரும், முதலமைச்சருமான சந்திரசேகர ராவ் வெளியிட்டார்.

ஐடி ரெய்டு.. கட்டிலுக்கு அடியில் கட்டு காட்டாக சிக்கிய ரூ. 42 கோடி - தொக்கா மாட்டிய காண்டிராக்டர்!

ஐடி ரெய்டு.. கட்டிலுக்கு அடியில் கட்டு காட்டாக சிக்கிய ரூ. 42 கோடி - தொக்கா மாட்டிய காண்டிராக்டர்!

வாக்குறுதிகள்

இந்நிலையில், தெலங்கானாவில் பாரதிய ராஷ்ட்ரிய சமிதி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், 400 ரூபாய்க்கு சிலிண்டர் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலுக்காக 55 வேட்பாளர்களைக் கொண்ட பட்டியலை நேற்று காங்கிரஸ் வெளியிட்டது.

telangana-promises-by-telangana-cm-chandrasekhar

காங்கிரஸ் கட்சி தெலங்கானாவில் ஆட்சிக்கு வந்தால் 500 ரூபாய்க்கு சிலிண்டர் மற்றும், ஏழைப் பெண்களுக்கு மாதம் 2,500 ரூபாய் அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது. அதனை மிஞ்சும் வகையிலான வாக்குறுதிகளை பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சி அறிவித்துள்ளது.